கழையார் தோளி கமலவதி தன்பாற் கருப்ப நாணிரம்பி விழைவார் மகவு பெறவடுத்த வேலை யதனிற், காலமுணர் பழையா “ரொருநா ழிகைகழித்துப் பிறக்கு மேலிப் பசுங்குழவி யுழையார் புவனமொருமூன்று மளிக்குÓ மென்ன வொள்ளிழையார், | 9 | (இ-ள்) கழையார்.....நிரம்பி - மூங்கில்போன்ற தோளினையுடைய கமலவதியினிடத்தில் கருப்பமுற்றும் நாள்நிரம்பி; விழையார்......அதனில் - விருப்ப முறும் மகவினைப் பெறுதற்கடுத்த நேரத்தில்; காலமுணர்......என்ன - காலநிலையை யறிந்த சோதிடர்கள் ஒரு நாழிகை கழித்துத் குழந்தை பிறக்குமாகில் இப்பிள்ளை இடமகன்ற மூவுலகங்களையும் அரசுபுரியும் என்று சொல்ல; ஒள்ளிழையார் - ஒளி விளங்கும் அணியினை அணிந்த அரசமாதேவி; (வி-ரை) கழை ஆர் தோளி - கழை - மூங்கில்; ஆர் - உவமவுருவு; பெண்களின் தோள்களுக்கு மூங்கிலினை உவமை கூறுதல் மரபு; பசுமை, நயப்பு, திரட்சி முதலிய பண்புகள் பொதுத்தன்மை. கருப்பநாள் - கருப்பமுற்றி மகவு பிறத்தற்குரிய நாள் எல்லை. 280 நாள் முதல் 300 நாள்கள்வரை இதன் எல்லை என்று கணக்கிடுவர். விழைவு ஆர்மகவு - விழைவு - பெருவிருப்பம்; நீண்டகாலம் பிள்ளைப் பேறின்றி இறைவர்பால் வரம்வேண்டிப் பெற்றமகவாதலின் விழைவார் என்றார்; யாவரும் விரும்பும் என்றலுமாம். மகவு பெற அடுத்த வேலை - பிள்ளை பிறக்கும் நேரம். காலம் உணர் பழையார் - கணிதர்கள்; சோதிடர்; பழையார் - பழைமையாகப் பயின்ற நூலுணர்வுடையோர். ஒரு நாழிகை.....அளிக்கும் - இது குழந்தை பிறக்கும் நேரத்தை ஒட்டி அதன் வாழ்க்கைப்பயன்களை நிச்சயித்துச் சாதகபலன் கூறும்நிலை - “மதியணி புனிதனன்னாள் மங்கல வணியாற் சாற்றிÓ (278); “அருக்கன்முதற் கோளனைத்து மழகிய உச் சங்களிலே, பெருக்கவலி யுடனிற்கப் பேணியநல் லோரையெழத், திருக்கிளரும் ஆதிரைநாள்Ó (1920) என்பன முதலியவை காண்க. ஒள்ளிழையார் - என - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. உழையார் புவனம் ஒரு முன்றும் - உழைவூர் - இடமகன்ற; உழை - பக்க இடம். இடமாவன மேல் நடு கீழ் என்பன; புவனம் ஒருமூன்றும் - மேல் நடு கீழ் என்ற மூன்றிடங்களில் உள்ள ஏழேழ் உலகங்கள். உழை - மான் என்று கொண்டு, மானேந்திய சிவனது மூன்று புவனம் என்றலுமாம். அளிக்குமாறு - புகழும் அருள்பெற்ற வலியும் செலுத்துதல். இப்பசுஞ்குழவி பிறக்குமேல் அது - என்க. |
|
|