அந்த ணாளர் வணங்கி“யரும் புதல்வ ரிருவ; ரையாண்டு வந்த பிராயத் தினர்;குளித்த மடுவின் முதலை யொருமகவை முந்த விழுங்கப் பிழைத்தவனை முந்நூ லணியுங் கலியாணம் இந்த மனை;மற் றந்தமனை யிழந்தா ரழுகை;Ó யென்றுரைத்தார். | 6 | (இ-ள்) அந்தணாளர் வணங்கி - வினவப்பெற்ற அந்தணர்கள் நம்பிகளை வணங்கி; அரும்புதல்வர்.....அழுகை - அரிய புதல்வர்கள் இருவர் ஐந்து வயது வந்தவர்கள்; குளித்த மடுவிலே ஒரு பிள்ளையை முதலை முன்விழுங்கிவிடத் தப்பிப் பிழைத்த பிள்ளைக்குப் பூணூல் அணியும் கலியாணமாகிய உபநயனம் நிகழ்வது இந்தமனை; மற்று ஒரு பிள்ளையை இழந்தாரது அழுகை அந்த மனையில் நிகழ்வது; என்று உரைத்தார் - என்று விடை கூறினார்கள். (வி-ரை) அந்தணாளர் - உரைத்தார் என்க. பிராயம் - வயது; பருவம்; குளித்த மடுவின் - விழுங்க - மடுவிற் குளித்தபோது ஒருமகவை விழுங்கிட; மடு - ஆழமாகிய நீர்நிலை; விழுங்க - மென்று தின்னும் இயல்பின்றி முதலைகள் தமது இறையினைப்பற்றி விழுங்கும் இயல்புடையன; விழுங்கியபின் ஒருவாற்றால் முதலைவயிற்றினைக் கிழித்து வெளிப்போந்து உயிர் பிழைத்தாரது வரலாறு முண்டு. பிழைத்தவன் - முதலை வாயிலகப்படாது தப்பிவந்து பிழைத்தவன். முந்நூலணியும் கலியாணம் - உபநயனம். பூணூல் கல்யாணம் என்னும் வழக்கும் காண்க. கலியாணம் இந்தமனை - கலியாணம் இந்தமனையில் நிகழ்வது. பிரமோபதேசம் என்னும் ஞான வாணியைச் சேர்வித்தல் என்பது குறிப்பு. மற்று - வினைமாற்றின்கண் வந்தது; அந்தமனை - அந்தமனையில் நிகழ்வது என்க. இழந்தார் - முதலையால் விழுங்கப்பட்டு மகவை இழந்தவர்களது; ஆறனுருபு விரிக்க. |
|
|