பாடல் எண் :4239

“உரைப்பா ருரைÓயென் றெடுத்ததிருப் பாட்டு முடியா முன்னுயர்ந்த
வரைப்பான் மையினீ டடம்புயத்து மறலி மைந்தனுயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற் றுடலிற் சென்ற வாண்டுகளுந்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப முதலை வாயிற் றருவித்தான்.
11
(இ-ள்) உரைப்பார்....முன் - எடுத்த அத்திருப் பதிகத்தில் “உரைப்பாருரைÓ என்று தொடங்கிய திருப்பாட்டு நிறை வெய்தா முன்னே; உயர்ந்த...மறலி - உயர்ந்த மலையின் தன்மைபோல நீண்ட பெரிய தோள்களையுடைய இயமன்; மைந்தனுயிர் கொணர்ந்து - மகனுடைய உயிரைக் கொண்டு வந்து; திரைப்பாய்.....நிரம்ப - அலைகளையுடைய நீரில் முதலையின் வயிற்றிலே நிலத்தில் இருந்து வளர்ந்ததுபோலக் கழிந்த (இரண்டு) ஆண்டுகளும் உடம்பில் நிரம்ப; முதலைவாயில் தருவித்தான் - முதலையின் வாயில் வரச் செய்தான்.
(வி-ரை) “உரைப்பாருரைÓ என்று - இது திருப்பாட்டின் தொடக்கம்; எடுத்த - தொடங்கிய; இஃது அத்திருப்பதிகத்தின் நான்காவது திருப்பாட்டு; இதன் ஈற்றடியில் “அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையேÓ என்று நம்பிகள் இறைவர்பால் விண்ணப்பிக்கின்றார். திருப்பாட்டு - நம்பிகளின் பாடலுக்குச் சிறப்பாய் வழங்கும் பெயர் வழக்கு; பிள்ளையார் பாடல் திருக்கடைக் காப்பு என்றும், அரசுகள் திருவாக்குத் தேவாரம் என்றும் வழங்கும்; “படியிலாநின்பாட்டில்Ó “வீட்டுக்கு வாயி லெனுந் தொடைÓ என்னும் குறிப்புக்கள் காண்க.
முடியா முன் - முடிந்த உடனே என்று விரைவு குறித்தது; முடியுமுன் என்னாது முடியா முன் என்ற குறிப்புக் காண்க. “நாவா யசைத்த வொலியொலி மாறியதில்லைÓ (தேவா) என்புழிப் போலக் கொள்க. பதிகப்பாட்டுக் குறிப்புப் பார்க்க.
உயர்ந்த வரைப் பான்மை - உயர்ச்சியுடைய மலையின் தன்மை; வரை - மலை; வரைப்பான்மை என்னின், வலிமை மட்டிலமையுமாதலின், உயர்ச்சியும் கூடக்குறிக்க, உயர்ந்த - என்றார், உயராதவரைகளும் (சிறுகுன்றுகளும்) உளவாகலான்; பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; மேல் நீள் தடம் என்பதும் காண்க.
நீள் தடம் புயத்து மறலி - இரண்டாண்டுகளின் முன் கழிந்த உயிரை அஃதந் நாளினுள்ள நிலையினின்றும் கொணரவும், அவ்வாறே முதலையினையும் கொணரவும், ஈராண்டு உடல் வளர்ச்சியும் தரவும் மேற் கொண்ட நீண்ட வலிமை குறித்தன இவ்வடை மொழிகள். ஐயாண்டில் மகன்பிரிந்தானாதலின், இப்போது உபநயனப் பிராயவிதி ஏழாண்டாதல் வேண்டப்படுதலின், சென்ற ஆண்டுகளும் வளர்ந்ததென - என்பதற்கு ஈராண்டுகள் எனப்பொருள் கொள்ளத்தக்கது. வரை - நீலமலை.
திரைப்பாய்புனல் - ஆழ்ந்தகன்ற நீர் நிலை.
உடலில் - மகவினுடைய உடம்பில். பெருவாய் முதலை - தன்மை நவிற்சி.
தரைப்பால் வளர்ந்ததென நிரம்ப - முதலையினாற் கவரப்பட்டிறவாது நில உலகில் வளர்ந்திருந்தாற்போல வயது நிரம்ப; என - உவமவுருபு; ஆண்டுகளும் நிரம்ப - என்க. மகவு வந்ததனோடு வயதும் நிரம்ப என உம்மை இறந்தது தழுவிய எச்சம். தருவித்தான் - வரச்செய்தான்; “பிள்ளைதரச் சொல்லு காலனையேÓ என்ற பதிகத்துக் கேற்ப மறலியின் செயல் விரிக்கப்பட்டது.
திருப்பதிக முடியா முன் - என்பதும் பாடம்.