பாடல் எண் :4241

மண்ணி னுள்ளா ரதிசயித்தார்; மறையோ ரெல்லா முத்தரியம்
விண்ணி லேற விட்டார்த்தார்; வேத நாத மிக்கெழுந்த;
தண்ண லாரு மவிநாசி யரனார் தம்மை யருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங் கொண்டு பணிந்தார் காசினிமேல்.
13
(இ-ள்) மண்ணில் உள்ளார் அதிசயித்தார் - நிலவுலகிலுள்ள மக்கள் அது கண்டு அதிசயித்தனர்; மறையோர்....ஆர்த்தார் - மறையவர்கள் எல்லாரும் உத்தரியங்களை ஆகாயத்தில் மேலே வீசி ஆர்த்தனர்; வேத...எழுந்தது - வேத ஒலி மிக எழுந்தது; அண்ணலாரும்.....காசினிமேல் - பெருந்தகையாரான நம்பிகளும் அவி
___________________
அவன் உயிர் பிழைத்தனன். அவன் சொல்லிய வரலாறு இது. அவன் உடலில் முதலையின் பற்களால் முதலை விழுங்கியபோதும் பற்றும்போதும் உளவாகிய கீறல் புண்கள் மட்டும் கண்டன. அவை நாளடைவில் ஆறிவிட்டன என்பது. இச் செய்தி பத்திரிகைகளிலும் வெளி வந்தது. நாசியாகிய சிவபெருமானை அரிய மறையோனது கண்மணிபோன்ற மகனையுங் கொண்டுசென்று உலகில் பணிந்தனர்.
(வி-ரை) உத்தரியம்....ஆர்த்தார் - உத்தரியத்தை ஆகாயத்தில் வீசி ஆர வாரித்தல் மகழ்ச்சி காட்டும் செயல்களுள் ஒன்று; இது வேதியர்கள் முதலிய உயர்ந்ததோர்பால் மிக்கு வழங்குவதொரு மரபு; மறையோ ரெல்லாம் என்றது காண்க. “தாமறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்கும் தன்மைÓ (1993). களிப்பினால் சிறு துணிகளை மேல் விரி ஆரவாரிக்கும் வழக்கு இந்நாளிலும் நிகழ்வது.
வேதநாதம் மிக்கு எழுந்தது - ஒலிப்பவரின்றியே வேத முழக்கம் கேட்பது ஒரு நன்னிமித்தம் என்பது (1929); வேதியர் வேதம் ஓதினர் என்றலுமாம்.
அண்ணலார் - நம்பிகள்; புதல்வனையுங் கொண்டு பணிந்தார் - சிவன் அருளால் உயிர் பெற்று வந்தமை குறித்துப் புதல்வனைக்கொண்டு பணியச் செய்தார்; தமக்கு அருளியமை குறித்து உடன் திருமுன் சென்று பணிந்தார். முன் 4239ல் உரைத்த நிலையும் கருதுக.
கண்ணின் மணியாம் - அருளால் மீள உயிர் பெற்றுவந்த அருமைப்பாடு குறித்தது. மணிஆம் - ஆம் - ஆக்கச் சொல் உவமம் குறித்தது.
பணிந்தார் - மறையோர் முதலியோர் தமது கழல்பணிய, அந்நிகழ்ச்சி இறைவரது செயலாதல் பற்றி அவரைப்பணிந்தார் என்பதாம். “எவ்வுயிர்க்குங், காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப், பாவலர்செந் தமிழ்பாடிப் பன்முறையும் பணிந்தெழுவார்Ó (3016) என்ற ஆளுடைய பிள்ளையார் சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது.