சிந்தை மகிழுஞ் சேரலனார் திருவா ரூர ரெனுமிவர்கள் தந்த மணிமே னிகள்வேறா மெனினு மொன்றாந் தன்மையராய் முந்த வெழுங்கா தலிற்றொழுது முயங்கி யுதியர் முதல்வேந்தர் எந்தை பெருமான் றிருவாரூர்ச் செல்வம் வினவி யின்புற்றார். | 20 | (இ-ள்) சிந்தை ....தன்மையராய் - (முன் கூறியவாறு கூடி) மன மகிழும் சேரமானாரும் திருவாரூர் நம்பிகளும் என்னும் இவ்விருவருடைய அழகிய மேனிகள் வேறா யிருந்தும், ஒன்றே யாகும் தன்மை யுடையவர்களாய்; முந்த.....முயங்கி - முற்பட்டு எழுகின்ற பெரு விருப்பத்தினாலே தொழுது தழுவிக் கொண்ட பின்; உதியர்.....இன்புற்றார் - சேரர் குலத்து வந்த முதன்மை பெற்ற அரசராகிய சேரமானார் எமது பெருமானாரது திருவாரூரின் சிறப்புடைய நன்மைகளைக் கேட்டு இன்ப முற்றனர். (வி-ரை) சிந்தை...இவர்கள் - முன் கூறியவாறு கலந்ததனால் இருபாலும் மகிழவந்த இருவர்களும். மணிமேனிகள்....முயங்கி - பெரு விருப்பத்தாற் றழுவிக் கொண்டமையால் இருவரது மணிமேனிகள் வேறு வேறாக இரண்டாயினும் ஒரே மேனியாக எண்ணக் கூடிய தன்மை பெற்றன என்பது. முயங்குதல் - தழுவிக் கொள்ளுதல்; முந்த - ஒருவர் ஒருவரை முற்பட்டு; முன்னரும் “ முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே, யன்பு பெருகத் தழுவவிரைந் தவரு மார்வத் தொடுதழுவ, வின்ப வெள்ளத் திடைநின்று மேற மாட்டா தலைவார்போல், என்பு முருகியுயிரொன்றி யுடம்பு மொன்றா மெனவிசைந்தார்Ó (3812) என்று இந்நிலையின் தன்மையை விரித்துக் கூறியது காண்க; இவ்வாறு தழுவிக் கொள்ளுதல் அரசர், பெரியோர் முதலியோர்களிடையில் இன்றும் நிகழும் மரபு. உதியர் - சேரர்கள். திருவாரூர்ச் செல்வம் - திருவாரூர்ப் பெருமானாரது அருட் டிறங்களை; செல்வம் - நம்மைகள்; “திருவாரூர் நிகழ் செல்வஞ் சொன்னார்Ó (2393) என முன்னர் வந்த கருத்தும் காண்க. வினவி இன்புற்றார் - வினவி, அதனை நம்பிகள் சொல்லக் கேட்டு, இன்புற்றார் என்க; அதனை நம்பிகள் சொல்லக் கேட்டு என்பது இசையெச்சம். முதல் - முதன்மை பெற்ற; முதல்வராகிய. |
|
|