பாடல் எண் :4258

எடுத்த வத்திருப் பதிகத்தி னுட்குறிப் “பிவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை யறுத்திட வேண்டுÓமென் றன்பரன் பினிற்பாடக்,
கடுத்த தும்பிய கண்டர்தங் கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்;
30
(இ-ள்) எடுத்த....என்று - அவ்வாறு தொடங்கிய அந்தத் திருப்பதிகத்தின் உட்குறிப்பு இந்த உலகத்திற் பாசத் தொடக்குள்ள வாழ்க்கையினை அறுத்திட வேண்டு மென்று கொண்டு; அன்பர்..பாட - அன்பராகிய நம்பிகள் அன்பு மிகுதியுடன் பாடியிட; கடுத்ததும்பிய கண்டர் -விடம் மிக்கு விளங்கும் கழுத் தினையுடைய இறைவர்; தம் கயிலையில்....கூட - தமது திருக்கயிலையில் சிவகணத்த வர்களுடன் கூட இருக்கும்படி; தடுத்த....முடிந்திட - முன்னர்த் தடுத்து உலகில் அவதரிக்கும்படி ஆணையிட்ட செய்கையின் அளவு தீர்ந்திட; தங்கழல்....அளிக்கின்றார் - தமது திருவடிச் சார்பினைத் தந்தருள்கின்றாராகி.
(வி-ரை) உட்குறிப்பு - பதிகம் பாடும் திருவுள்ளக் குறிப்பு. கருதிய பொருள்; உட்கிடையாகிய விண்ணப்பம்.
உலகினில் பாசம் - உலகில் வருதற் கேதுவாகிய தொடக்கு; அடுத்த - பாசத்தால் பொருந்திய;
கணத்தவருடன் கூடக் - கழற் சார்புதந்து - கூடுதற் கேதுவாகிய திருவடிச்சார்பு.
தடுத்த செய்கை - முன்கணத்தவருடன் கூடியிருந்ததனைத் தடுத்த ஆணை; “மாதர் மேன்மனம் வைத்தனை தென்புவி, மீது தோன்றி....அணைவாய்Ó (37)என்ற செய்கை; முடிந்திடுதல் - எல்லையறுதல்; “குறுகிடÓ (4256) என்ற கருத்து; முடிந்திட - முடிந்திடுதலால்.
கழற்சார்பு - கழலை நீங்காது சார்ந்திருக்கும் நிலை; அளிக்கின்றார் - முற்றெச்சம். அளிக்கின்றாராகிப் - பொழுதின்கண் - அருள்செய்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.