பாடல் எண் :4077

திரைசெய்கட லுலகின்கட் டிருநீற்றி னெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி யோங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்கால மளித்திறைவ ரருளாலே
பரசுபெருங் சிவலோகத் தின்புற்றுப் பணிந்திருந்தார்.
9
(இ-ள்) திரைசெய்........நெடுமாறனார்-அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகில் திருநீற்று நெறியாகிய சிவநெறி விளக்கமடையும்படி எடுத்துச் சொல்லப்படும் பெரிய புகழினை விளங்கவைத்ததனால் மேன்மை பொருந்திய நின்றசீர் நெடுமாற நாயனார்; அரசுரிமை.......அளித்து - நீண்டகாலம் அரசாட்சி செய்திருந்து; இறைவரருளாலே...பணிந்திருந்தார் - சிவபெருமானது திருவருளாலே எல்லாராலும் பரவப்படுகின்ற பெரிய சிவலோகத்தினை அடைந்து இன்பம் பொருந்திப் பணிந்தமர்ந்திருந்தனர்.
(வி-ரை) திருநீற்றின் நெறி - சிவநெறி; விளங்க....விளக்கி - முன்னர்ப் “பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழிÓந்த நிலையும் (1916), “இருவர்தம் பாங்கு மன்றிச் சைவமங் கெய்தா தாகÓ (2501) என்ற நிலையும், நீங்கித் திருநீறு எங்கும் விளங்கிற்று என்று சொல்லப்பெறும் பெரும்புகழினை விளக்கி;
ஓங்கும் - அதனால் ஓங்கிய; ஓங்கும் - “வேந்தனு மோங்குகÓ என்ற திருப்பா கரத்தினாலே கூனிமிர்ந்தோங்கிய (2746) என்ற குறிப்புமாம்.
நெடுங்காலம் அரசுரிமை அளித்து - நீண்ட நாள் அரசாட்சி செலுத்தி; சிவ லோகத்து....இருந்தார் - பணிதலால் இன்ப முற்று நிலை பெற்றிருந்தனர்; இன்பம் - சிவானந் தானுபத்திற் றிளைத்தல்; பணிந்து - முத்த நிலையிலும் ஆண்டானடிமைத் திறமே உள்ளது; “உயிர்தானும் சிவானுபவ மொன்றினுக்கே யுரிந்துÓ (சித்தி)