நிறையழிந்த வுள்ளத்தால் “நெற்பண்டா ரமுமன்றிக் குறைவினிதிப் பண்டார மானவெலாங் கொள்ளைமுகந் திறைவனடி யார்கவர்ந்து கொள்கÓ வென வெம்மருங்கும் பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார். | 9 | (இ-ள்) நிறையழிந்த உள்ளத்தால் - நிலையழிந்த உள்ளத்தினாலே; நெற்பண்டாரமுமன்றி.......கொள்க என - நெற்பண்டாரம் மட்டுமே யன்றிக் குறைவில்லாத நிதிகளின் பொக்கிசங்களாகிய எல்லாவற்றையும் கொள்ளையாக முகந்து இறைவனடியார்கள் கவர்ந்து கொள்க என்று; எம்மருங்கும்.....பயன் கொள்வார் - எல்லாப்பக்கங்களிலும் பறைசாற்றும்படி செய்தனர்; தாம் பெற்ற நிதிகளாலாகிய பயனைக் கொள்வாராகிய இடங்கழியார். (வி-ரை) நிறையழிந்த உள்ளத்தான் - ஆள் - உருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. நிலையழிந்த உள்ளத்தோடும்; தமது அரசாட்சியில் அடியார்கள் சிவன் திருத்தொண்டுக்கு உடலின்றி வருத்தும் நிலையும் உளதாயிற்றே என்றும், உண்மை யடியாரை அறியாது காவலாளர் பிடிக்க நேர்ந்ததே என்றும், மனமழிந்தனர்; சிவதருமங்களைச் செல்வே அவரவரும் வேண்டியவாறு செய்யும்படி நிறுவுவது _______________ 1 குறிப்பு :- இருக்கும் வேன் - என்பது இருக்கு வேள் என்றிருத்தல் கூடுமோ என்பது ஐயப்பாடு; “இருக்குவேளிர் மன்Ó (திருவந் - 65) என்ற வகைநூல் காண்க; இருக்குவேளிர் என்பது இம்மன்னரது மரபின் பெயர் என்பது சரித ஆராய்ச்சி யாளர் கல்வெட்டு ஆதரவுகளாற் கண்டது. அரசாட்சியின் குறிக்கோள் என்பது கருத்து. முன் (4113) உரைத்தவை பார்க்க. நிறை - உறுதி; பொருட்பற்று நீங்கிய எண்க. நெற்பண்டாரமுமன்றிக் குறைவினிதிப் பண்டாரமும் - பண்டாரம் - (பொக்கிசம்) நெல்லும், பொன் - மணி முதலாயினவும், என இருவகையினது; இவ்விருவகையினையும்; எலாம் - எல்லாவகையும்; முற்றும்மை தொக்கது. கொள்ளை முகந்து - கொள்ளை - எண்ணில்லாமற் கொள்ளப்படுவது ; அளவு படாதபடி; முகந்து என்பதும் இக்குறிப்புத்தருவது; வாரிக்கொண்டு. கொள் - பகுதி. பறையறையப் பண்ணுவித்தார் - பறைசாற்றுவித்தனர்; பறைசாற்றுதலினாலும் வாக்கினால் செரல்லுதலினாலும் இச் செய்தியினை அடியார் தெரியும்படி; நெற்...பண்ணுவித்தார் - “திங்கட் சடையான் றமரதென் செல்வ மெனப் பறை போக்கும்Ó என்பது வகைநூல் ( திருவந் - 65). படைத்த - பெற்ற - ஈட்டிய; சேமித்த. நிதிப்பயன் - நிதிபடைத்த பயனாவது சிவனுக்கும் அடியாருக்கும் ஆக்குதலாம் என்பது வேத சிவாகமங்களின் துணிபு; முன் பல இடத்தும் உரைத்தவை யெல்லாம் காண்க. குறைவில்நிதி - படைந்தநிதி - முன்னோர் காலமுதல் ஈட்டிவைத்த பெரும்பொருள் என்பது குறிப்பு. கொள்வார் - கொள்வாராய்; கொள்வார் - பண்ணுவித்தார் என்று கூட்டுக. வினையாலணையும் பெயராகக் கொண்டு கொள்வாராகிய நாயனார் பண்ணுவித்தார் என்றலுமாம். |
|
|