பாடல் எண் :4188

நீண்டசெஞ் சடையி னார்க்கு நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டவன் பிடைய றாத பூசலார் பொற்றாள் போற்றி்
ஆண்டகை வளவர் கோமா னுலகுய்ய வளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம் பாதங்கள் பரவ லுற்றேன்.
18
(இ-ள்) நீண்ட.....போற்றி - மிக நீண்ட சிவந்த சடையினையுடைய இறைவருக்கு நினைப்பினாலேயே கோயில் அமைத்து மேற்கொண்ட அன்பு இடையறாது செய்த பூசலாருடைய பொன்னடிகளைத் துதித்து; (அத்துணையாலே) ஆண்டகை....பரவலுற்றேன் - ஆண்மை மிக்க சோழர் பெருமான் உலக முய்யத் திருவுயிர்த்த செல்வப் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையாரது திருவடிகளைத் துதிக்கப் புகுகின்றேன்.
(வி-ரை) நீண்ட செஞ்சடையினார் - “எறிநீர்க் கங்கை தோய்ந்த நீள் சடையார்Ó (831) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க; புறத்தே நீண்ட தன்றியும் இங்கு நாயனாரது அகத்திலும் நீண்டு கோயில் கொண்ட நிலைக்குறிப்பு.
நினைப்பினால் கோயில் - மனக்கோயில்; அன்பிடையறாத - முன்னும் பின்னும் நீங்காத அன்பின் தொடர்ச்சியுடைய. (4187).
ஆண்டகைமையாவது “சிலம்பணிசே வடியார்தம், மன்னியசை வத்துறையின் வழிவந்துÓ எக்காலத்தும் பிறழாது சிவநெறி நிற்கும் வீரம்.
உலகுய்ய அளித்த - மங்கையர்க்கரசியார் வரலாற்றின் விரிவு காண்க. (ஆளுடைய பிள்ளையார் புராணம்); பரசமய நிராகரணம் சைவத்தாபனமும் ஆகிய உய்தியினை உலகம் பெறவைத்த.
வளவர் கோமானளித்த - பாண்டிமாதேவியார் - “வளவர்கோன் பாவை.....பாண்டிமாதேவிÓ (தேவா); இவரது வரலாற்றுக் குறிப்பு.
பரவல் - துதித்தல்; மேல்வரும் இவரது புராணம் துதி உருவமாயே யமைந்திருத்தல் காண்க.