பாடல் எண் :4245

செய்வ தொன்று மறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்“தென்
ஐய னணைந்தா; னெனையாளு மண்ண லணைந்தா; னாரூறிற் சைவ னணைந்தா; னென்றுணையாந் தலைவ னணைந்தான் றரணியெல்லாம்
உய்ய வணைந்தா னணைந்தாÓ னென் றோகை முரசஞ் சாற்றுவித்தார்.
17
(இ-ள்) செய்வதொன்றும்......களிகூர்ந்து - செய்வது இன்னதென்று ஒன்றும் தோன்றாமல் மனமகிழ்ச்சி மேலிட்டு; “என்.....அணைந்தான்Ó என்று - “என் ஐயனாகிய நம்பிகள் வந்தணைந்தனர்Ó என்னை ஆட்கொள்ளும் பெருமையுடையவர் வந்தணைந்தனர்; திருவாரூரின் மகிழ்ந்தருளும் சைவப் பெருமகனார் வந்தணைந்தனர்; எனது துணைவராகிய தலைவர் அணைந்தனர்; உலகமெல்லாம் உய்யும் பொருட்டு இவ்வுலகில் வந்தவதரித்தவராகிய நம்பிகள் வந்தணைந்தனர!்Ó என்று பலவாறும் எடுத்துச் சொல்லி; ஓகை முரசம் சாற்றுவித்தார் - உலகை முரசத்தை நகரமெங்கும் சாற்றும்படி செய்தனர்.
(வி-ரை) செய்வதொன்றம் அறியாது - இது மகிழ்ச்சி மீக்கூர்தலால் வரும் நிலை;்“மூண்டபெரு மகிழ்ச்சியினால் முன்செய்வ தறியாதேÓ (1801) என்ற நிலையும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; ஆண்டு, அப்பூதியார்்“காண்டகைமை யின்றியும் முன்கலந்த பெருங்கேண்மையினால்Óஅன்பு பூண்டு தியானப் பொருளாய்க் கொண்டு வழிபட்டருளு மூர்த்தியாகிய அரசுகள் தாமாகவே தமது கடைத்தலையில் வந்து நிற்கக் கண்ட செய்தி பெருமகிழ்ச்சி விளைத்தது. ஈண்டு, முன் சேரலனாருக்கு இறைவர் அறிவிக்க அறிந்து, முன்னர்ச் சென்று வரங்கிடந்து வருந்தியழைத்துக்கொண்டுவந்து வழிபட்ட தெய்வமாகிய நம்பிகள், எதிர்பாராது தாமாகவே தம்மை நினைந்து எழுந்தருளக் கேட்ட செய்தி அவ்வாறே பெருமகிழ்ச்சியை விளைத்தது. இவ்வாறு இவற்றுள் ஒற்றுமை நயங்களைக் கண்டுகொள்க; பின் கூறப்பட்ட செய்திகள் அப்பெரு மகிழ்ச்சி காரணமாகப் பலபடப் பன்னியுரைத்த தன்மையும் கண்டுகொள்க.
என் ஐயன் - எனை ஆளும் அண்ணல் - ஐயன் - முதல்வன்; ஆளும் அண்ணல் - ஆளாகக் கொள்ளத் தகுதியற்ற என்னையும் ஆளும் பெருமையுடையவன்; எனை - என்னையும் என இழிவு சிறப்பும்மை தொக்கது; ஆளும் - ஆளுதலினால் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; உடம்பொடு புணர்த்தி யோதியது அக்கருத்துடையது.
ஆரூரிற் சைவன் - திருவாரூரில் உள்ள சிவனுக் கடிமைப்பட்டவர்; நம்பிகளது தேவாரங்கள் காண்க;்“ஆரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன்Ó என்பன முதலியவை. என் துணையாம் தலைவன் - ஏனை ஆளாகக் கொண்டதனோ டன்றி எனக்குத் துணையுமானவன்; "சேரமான் றோழரென்று பார்பரவு மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்காகி விளங்கியதால்" (3813); துணையாதலோடு தலைவருமானவர்.
தரணி எலாம் உய்ய அணைந்தான் அணைந்தான் - உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு வந்தவராகிய (நம்பிகள்) அவர் அணைந்தார்; முன்னது வினைப்பெயர்; பின்னது வினைமுற்று, இஃது ஆசிரியரது கவிநயம். “மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடப் , போதுவார்Ó (35) என்று தொடக்கத்திற் கூறியதனை முடித்துக் காட்டிய கவிநயமும், பொருத்தமும் காண்க.
ஓகை முரசம் - ஓகை - உவகை; தமது மகிழ்ச்சியை ஊரவர் அறிய வெளிப்படுத்தற்கு இவ்வாறு முரசம் சாற்றுதல் செய்வித்தார்; பெரு நிகழ்ச்சிகளை முரசமறைவித்து அறிவித்தல் மரபு. சந்தோட பேரிகை என்பர் வடவர்.