இந்த ஆறங்கங்களிலும் வல்லவர்கள் வேதத்தின் பொருளை நன்கறிந்தவர்கள். வேதத்தினை யறிந்தவர் வேத முதல்வராகிய இறைவனையறிவர். வேதம் அங்கம் இவைகள் இறைவனுடைய திருவாக்கில் தங்கியுள்ளன. ஆதலினால் “அங்கவாயா” என்றனர். கருத்துரை மூவர் முதல்வரே! குறமகள்கணவரே! பராசலமேவிய பரம்பொருளே! மாதர் மயக்கற்று உமது பாதமலர் மீது அன்பு வைக்க அருள் புரிவீர். மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென வண்டினங்கண்டு தொடர் குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்யுயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலூரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை பெருமாளே. |