புனையும்-தரித்துக்கொண்டுள்ள, உன் அடிசேராய்-தேவரீரது திருவடியிற் சேர்த்தருள்வீர். பொழிப்புரை பன்றியினது அழகியகொம்பையும் ஆமையினது ஓட்டையும், சர்ப்பாபர ணத்தையும், தேவர்களது பழமையான எலும்புகளையும், தசை நீங்கிய முழு எலும்பின் கூட்டையும், அணிகலமாகத் தரித்துக் கொண்டுள்ள சிவபெருமானது திருக்குமாரரே! கூட்டிலிருந்து கொஞ்சுகின்ற கிளிகளானது அக் கூட்டின் முகப்பில் அடிக்கடி வந்து `ஐந்து கரங்களையுடையவரும், சகல கலாவல்லவரும் ஆகிய விநாயகமூர்த்தியின் அருமைத் தம்பியே’ என்று துதிக்கும்படியான வயலூர் என்னும் புண்ணிய தலத்தில் வசிப்பவரே! குன்றுகளில் வசிப்பவராகிய வேடர்கள் முன்னாளிற் சென்று எம்புதல்வியை மணந்தருள்வீர் என்று தந்த வள்ளிநாயகியாரை மணம் புரிந்துகொண்டு, அழகு தங்கிய பொன்னிறத்தை யுடைய மலர்கள் செறிந்துள்ள செண்பகத்தருக்களினது சோலைகளாற் சூழப்பெற்றதும், சந்திர சூரியர்களும் மேகங்களும் தங்கும்படி உயர்ந்திருப்பதும், தென்னாட்டில் சிறப்பு வாய்ந்ததுமாகிய திருப்பரங்குன்றத்தில் அடியார் பொருட்டு எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே! வாசனை பொருந்திய அழகிய மலர்க் கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்ற ஒலியுடன் வண்டின் கூட்டங்கள் தேனையுண்பதற்காகத் தொடர்கின்ற கூந்தலையுடையவர்களாகிய மாதர்களது நெருங்கிய கொவ்வைக் கனிக்கு நிகரான அதரத்திற் பெருகும் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மேன்மேல் விருத்தியடையவும், இரவிக்கை யணிந்துகொண்டுள்ள கலசத்தை யொத்து பருத்த தனங்களுடைய மார்பில் பொருந்தவும், பாணத்தை நிகர்த்த விழிகள் சோர்வடையவும், உடல் குழைந்து உருகவும், உந்தியென்கின்ற மடுவில் விழுகின்றவனாகிய அடியேனை, சிலம்பையும், பொன்னாலாகிய தண்டையையும், கிண்கிணி |