யையும் அழகிய கடப்ப மலர்கலையும், அணிந்து கொண்டுள்ள தேவரீரது திருவடியிற் சேர்த்தருளுவீர். விரிவுரை தொண்டை அமுது உண்டு :- விரகதாபத்தால் பெண்களது அதரபானத்தை அமிர்தமெனக் கருதி அதனை சதாகாலமும் பருகிக் கொண்டு அவமே மனிதர்கள் காமமயக்கங்கொண்டு அழிகின்றனர். “குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் றிடுநாயேன்” -(கொலைமத) திருப்புகழ். பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி லூறிய நீர். -திருக்குறள். உந்தியென்கின்றமடு விழுவேனை..........அடிசேராய் :- ஆழமுள்ள மடுவில்வீழ்ந்தோர்கள் கரை சேர்வது எத்துணையரிதோ அத்துணையரிது உந்தித் தடத்தில் வீழ்ந்தோர்களும் முத்திக்கரை சேர்வது. “அவத்தமாய்ச்சில படுகுழி தனில் விழும் (பழிப்பர்) திருப்புகழ். “பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள் பலபல விதமுள துன்ப சாகர படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக னென்று சேர்வேன். “அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்” -இராமலிங்கஅடிகளார். ஆழமாகிய பெரிய மடுவின்கண்வீழ்ந்தோர்கள் புணையின் துணையின்றி எங்ஙனம் கரையேறுதல் முடியாதோ அங்ஙனமே உந்தியென்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் வேற்பரமனது தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித்தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி அம் மடுவினின்றும் |