பெருமானை திருநோக்கஞ் செய்தருளினர். அக்குறிப்பை யுணர்ந்து குமாரக் கடவுள் திருப்பாற் கடலையணுகி ஓர் ஊங்காரஞ் செய்தார். அதனைக் கேட்ட கூர்மம் மூர்ச்சித்தது. அக்காலை முருகப்பெருமானுடன் பின் தொடர்ந்து வந்த அரிகர புத்திரராகிய ஐயனார் அக்கூர்மத்தைப் பற்றி இழுத்து வெளியிற் கொணர்ந்தனர். கந்தவேள் தம் திருவடி கொண்டு அதனை ஏற்றுதலும் அக்கூர்மம் அண்ட முகடுமே இடிந்து விழுந்தாற்போல் மேலே எழுந்து நிலம் பிளக்க திக்கு செவிடுபட மல்லாந்து விழுந்தது. இளம்பூரணன் இருப்புலக்கை கொண்டு ஓரடி யடிக்க உன்னும் போது, செந்தாமரைப் பொகுட்டில் வீற்றிருக்கும் இலக்குமிதேவி விரைந்து வந்து கண்ணீருகுத்து வடிவேற் பரமனை வணங்கி, “மருவார் செழுங்கூந்தல் வாணிகலன் பூண்டிருப்பத் தருநீழன் மேவிச் சசிவாழ்வி னோடிருப்பத் திருவோ திருவிழப்பர் தேவர்சூ ளாமணியே மருகோ யுயிரளித்தென் மங்கலநாண் காப்பாயே. மங்காத காமர்பிடி மான்மருங்கு வைத்தருளு மெங்கள் பெருமானே யேத்துவார் கண்மணியே கங்கை குமராவென காதலனை யுய்வித்து மங்கல நாண்பிச்சை வழங்காய் வழங்காயே. மூவரென வோது முதற்றேவ ரிலொருவன் ஆவி யழிந்தா லவுணர்நினை யேசாரோ தேவரிடர் தீர்ப்பாய் சிற்றடிச்சி மங்கலநாண் காவல் புரியாயேல் என்னாங் களைகண்ணே” என்று துதித்துத் தன் முன்றானையை நீட்டி மாங்கல்ய பிச்சைக் கொடுத்தருள வேண்டுமென்று குறையிரந்து வேண்டினள். என்று மிளையபெருமாளாகிய குகப் பெருமான் திருவுளமிரங்கி விட்டுணுவாகிய கூர்மத்தின் உயிர் போக்காது அதன் ஓட்டினை மட்டும் பெயர்த்து உறுதி கூறி திருக்கயிலையைநணுகி, தந்தையார்பால் அவ்வாமையின் தி-13 |