பக்கம் எண் :


186திருப்புகழ் விரிவுரை

ஓட்டினை வைத்தருளினார். முக்கட்பரமன் தம்புதல்வராய முருகநாயகனை யணைத்து முதுகுதைவந்து மருங்கில் இருத்தினர். பின்னர் தேவர்கள் வேண்ட, அவ்வாமையின் ஓட்டைத் தமது திருமார்பில் உள்ள பிரம விட்டுணுக்களின் சிரமாலைக்கு நடுநாயகமாக அமைத்து தரித்துக் கொண்டு அமரர்களுக்கு அருள் பாலித்தனர்.

பின்னர் கூர்வடிவேற்ற திருமால் மயக்கம் நீங்கி பண்டைய உணர்வுற்று பரமபதியைத் துதித்து, தெளிந்த அறிவுடனே, நாரதர் முதலிய முனிவர்க்கும் பிறர்க்கும் சிவபெருமானது பெருமையை நன்கு விளக்கும் கூர்மபுராணத்தைக் கூறித் தம் பழைய வடிவு தாங்கி வைகுந்த மெய்தினர். இச் சம்பவம் பதுமகற்பத்தில் நிகழ்ந்தது.

தத: ப்ராண் யுபகாராயகூர்மம் ஸம்ஹ்ருத்ய கர்விதம்
ததங்கம் பூஷணத்வேந தாரயாமாஸ சங்கர:
   -காளிகா காண்டம்.

மகரந்திளைக்குங் கடலேழு மலங்கக்கலங்கும் பசுந்துளவ
முகைவிண் டலர்தா ராமையினைப் பற்றித் தகர்த்தமுதுகோடு
நகுவெண் டலைமா லிகையணிக்கு நடுநாயகமாக் கோத்தணிந்து
புகரின் றுயர்ந்தோர் தொழப்பொலிந்த புத்தேள் செல்வத் திருவுருவம்.
                                           -காஞ்சிபுராணம்

புயங்கம் :-

சிவபெருமான் நாகங்களை ஆபரணமாகக் கொண்ட வரலாறு

தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்த தென்றும் அவர் பன்னியர் கற்பே உயர்ந்ததென்றும், கர்மமே பலனைக் கொடுக்கு மென்றும் கருதி, கண்ணுதற் கடவுளை கருதாது மமதையுற்று வாழ்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நல்லறிவுச்

சுடர் கொளுத்த நம்பன் திருவுளங்கொண்டு திகம்பரராய்ப் பிட்சாடனத் திருக்கோலங்கொண்டு, திருமாலை மோகினி வடிவு கொள்ளச்செய்தும் அம்முனிவர் தவத்தையும் முனிபன்னியர் கற்பையும் அழித்தனர்.