பக்கம் எண் :


188திருப்புகழ் விரிவுரை

சுரர்கள் பண்டை என்புஅங்கம் :-

“காத்தும் படைத்துங்கரந்தும் விளையாடும் கறைமிடற்றண்ணல் சர்மசம்வாரம் புரிந்தபின் தன் பக்தர்களாகிய பிரமாதி தேவர்களின் எலும்புகளையும், எலும்பின் கூட்டையும் (கங்காளம்) அவர்கள் பக்திக்காக அன்புடன் தரித்துக் கொள்வர்.

“பரமனிவ்வகை யடுந்தொறு மடுந்தொறும் பலவாம்
 பிரம னாதியோரென்பினைத் தரிக்கும்”        
-கந்தபுராணம்.

ஐந்து கர பண்டிதன் :-

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவரும், முத்தமிழிடை வினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதல்வோனுமாகி விளங்குவதால் விநாயக மூர்த்தியைப் “பண்டிதன்” என்றனர். புலவர்களுக்கு அறிவருளும் அண்ணலும் அவரே; அவரை வழிபடுவோர் சகலகலா வல்லவராகத் திகழ்வார். ஐந்துகரத்தானை ஆனை முகத்தண்ணலைப் பூசித்துப் படிக்காமலே கல்வி ஞானத்தைப் பெற்ற நம்பி யாண்டார் நம்பியே போதிய சான்று.

நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்
நற்குஞ் சரக்கன்று காண்.

தென்பரங்குன்று :-

திருப்பரங்குன்றம் பராசரகுமாரராகிய தத்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்ற அறுவருக்கும் முருகப் பெருமான் உபதேசித்த அற்புத க்ஷேத்திரம்.

கருத்துரை

சிவகுமாரரே! விநாயகரதுதம்பியே! திருப்பரங்குன்றம் மேவிய தேவ தேவா! மாதர் மயக்குறாது அடியேனை தேவரீரது திருவடியிற் சேர்த்தருள்வீ்ா.

20

வரைத்தடங் கொங்கை யாலும்
    வளைப்படுஞ் செங்கை யாலும்
    மதர்த்திடுங் கெண்ட யாலும்      அனைவோரும்