வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யோலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் வசமாகி ஏரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்தவாரி கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும் இணைப்பதம் புண்ட ரீகம் அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூர னிளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோள மளவாகத் துரத்தியன் றிந்த்ர லோக மழித்தவன் பொன்றுமாறு சுடப்பருஞ் சண்ட வேலை விடுவோனே செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே தினைப்புனஞ் சென்று லாவு குறத்தின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு பெருமாளே. பதவுரை சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்-தேவர்கட்கு வஞ்சனையைச் செய்த சூரபன்மனும், இளக்ரவுஞ்சந்தனோடு-இளையனாகிய கிரவுஞ்சன் என்ற அரக்கனுடன், துளக்க-உலகம் நடுங்குமாறு, எழுந்து, போர் புரிய எழுந்து - அண்டகோளம் அளவாக-அண்டகோளகை வரை, துரத்தி-தேவர்களைத் துரத்திச் சென்று, அன்று இந்த்ரலோகம் அழித்தவன்-அந்நாளில் இந்திரனுடைய உலகத்தை யழித்தவனுமாகிய அரக்கர்கோன், பொன்றுமாறு- இறந்துபடுமாறு, சுட பரும் சண்ட வேலை விடுவோனே-சுடுகின்ற மிக்க வேகமுடைய வேலாயுதத்தை விடுத்தருளியவரே! செருக்கு எழுந்து-போருக்கு எழுந்து, உம்பர் சேனை துளக்க-வானவர் |