சேனை கலங்குமாறு, வென்று அண்ட மூடு-வெற்றி பெற்று வான உலகில், தெழித்திடும்-சினந்து நின்ற, சங்கபாணி-சங்கத்தை ஏந்திய திருக்கையினராகிய திருமாலின், மருகோனே திருமருகரே! தினைப்புனம் சென்று-தினைப்புனத்திற்குச் சென்று, உலாவு குறத்தி இன்பம் பராவு-அங்கு உலவுகின்ற வள்ளியம்மை யாருடைய இன்பத்தைப்புகழ்ந்து பேசிய, திருப்பரங்குன்ற மேவு-திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! வரை தடம் கொங்கையாலும்-மலைபோன்ற பருத்த தனங்களினாலும், வளைப்படுஞ் செங்கையாலும்-வளைகள் நிறைந்த சிவந்த கரங்களாலும், மதர்த்திடும் கெண்டையாலும்-செழிப்புடைய மீன் போன்ற கண்களாலும், அனைவோரும் வடுப்படும் தொண்டையாலும்-எல்லோராலும் வடுப்படுத்தப்பட்ட கொவ்வைக்கனி போன்ற இதழாலும், விரைத்திடும் கொண்டையாலும்- நறுமணங் கமழ்கின்ற கூந்தலாலும், மருட்டிடும் சிந்தைமாதவர் வசம் ஆகி- இளைஞர்களை மயக்குகின்ற மனமுடைய பொது மகளிருடைய வசப்பட்டு, எரிபடும் பஞ்சுபோல-நெருப்பில் வீழ்ந்த பஞ்சைப்போலே, மிககெடும் தொண்டனேனும்-மிகவும் கெடுகின்ற அடியேனாகிய சிறியேன், இனல்படும் தொந்தவாரி-துன்பப்படுகின்ற பந்த பாசத்தினால் வருகின்ற பிறவிக்கடலினின்றும், கரையேற-கரையேறி உய்யும்படி, இசைத்திடும் சந்தபேதம் ஒலித்திடும் தண்டை சூழும்-இசை நூல்கள் கூறும் பலவகையான சத்தங்களை ஒலிக்கின்ற தண்டைகள் சூழ்ந்த, இணை பதம் புண்டரீகம்-தாமரை போன்ற இரண்டு திருவடிகளையும், அருள்வாயே-அடியேனுக்குத் தந்து அருள்புரிவீர். பொழிப்புரை தேவர்களுக்கு வஞ்சனையைச் செய்த சூரபன்மன் இளமை பொருந்திய கிரவுஞ்சன் என்ற அசுரனோடு உலகம் நடுங்குமாறு போருக்கு எழுந்து சென்று, அண்டகடாகம் வரை அமரர்களைத் துரத்திச் சென்று, அந்நாளில் இந்திரனுடைய உலகமாகிய பொன்னுலகத்தை யழித்தபோது, அவ்வசுரன் மாளும்படி சுடுகின்ற மிகப் பெரும் வேகமுடைய வேலாயுதத்தை விடுத்தருளியவரே! போருக்கு எழுந்து தேவர்சேனை நடுங்குமாறு வெற்றி பெற்று, வானத்தில் சினங்கொண்ட சங்கமேந்திய திருக்கையராகிய கண்ணபிரானுடைய திருமருகரே! தினைப்புனத்தில் |