பக்கம் எண் :


திருச்செந்தூர்197

ஓம் குஹாய நம:

திருப்புகழ் விரிவுரை

திருச்செந்தூர்

1

    முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
       சந்தமொடு நீடு பாடிப் பாடி
       முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி     யுழலாதே
      முந்தைவினை யேவ ராமற் போக
       மங்கையர்கள் காதல் தூரத் தேக
       முந்தடிமை யேனை யாளத் தானு     முனைமீதே
    திந்திதிமி தோதி தீதித் தீதி
       தந்ததன தான தானத் தான
       செஞ்செணகு சேகு தாளத்தோடு      நடமாடுஞ்
      செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
       துங்க அநு கூல பார்வைத் தீர
       செம்பொன்மயில் மீதிலேயெப் போது  வருவாயே
    அந்தண்மறை வேள்வி காவற் கார
       செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
       அண்டருப கார சேவற் கார         முடிமேலே
      அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
       குன்றுருவ ஏவும் வேலைக் கார
       அந்தம்வெகு வான ரூபக் கார         எழிலான
    சிந்துரமின் மேவு போகக் கார
       விந்தைகுற மாது வேளைக் கார
       செஞ்சொலடி யார்கள் வாரக் கார       எதிரான