பக்கம் எண் :


198திருப்புகழ் விரிவுரை

      செஞ்சமரை மாயு மாயக் கார
       துங்கரணசூர சூறைக் கார
       செந்தில்நகர் வாழு வாண்மைக்கார   பெருமாளே.

பதவுரை

அந்தண்-அழகிய குளிர்ந்த சிந்தையுடையவர்களால், மறைவேள்ளி- வேதவிதிப்படிச் செய்யும் யாகங்களுக்கு, காவல்கார-இடையூறு நேராவண்ணம் காவல்புரியும் காவல்காரரே! செந்தமிழ்-செவ்வையான தமிழ்மொழியாகிய, சொல்பாவின்-புகழ்ப் பாக்களாலாகிய பிரபந்தங்களை, மாலைக்கார-மாலையாகத் தரித்துக் கொள்பவரே! அண்டர் உபகார-தேவர்களுக்கு (சூரபன்மனால்ஏற்பட்ட சிறையை நீக்கி) உபகரித்தவரே! சேவல்கார-சேவற்கொடியைக் கரத்தில் தாங்கியவரே! முடிமேல் அஞ்சலி செய்வோர்கள்-சென்னியின்மேல் கரங்களைக் குவித்து வணங்குகின்ற அடியார்களுக்கு, நேயக்கார-சிநேகராக விளங்குபவரே! குன்று உருவ ஏவும்-கிரௌஞ்சமலையை ஊடுருவிச் சென்று பிளக்குமாறு செலுத்திய, வேலைக்கார-ஞானசக்தியாகிய வேலாயுதத்தையுடையவரே! அந்தம் வெகுவான-மிகுந்த அழகுடைய, ரூபக்கார-திருமேனியைக் கொண்டவரே! எழில் ஆன-அழகு மிகுந்த, சிந்தூர மின் மேவு-தேவயானையின் மகளாகிய தேவகுஞ்சரியம்மையார் விரும்புகின்ற, போகக்கார-சிவபோகத்தையுடையவரே! விந்தை குற மாது-அற்புதமடையத்தக்க அரிய குணங்களையுடைய குறமகளாகிய வள்ளிநாயகியாருடன், வேளைக்கார-பொழுதைப் போக்குபவரே! செஞ்சொல்-செவ்வையான சொற்களையுடைய, அடியார்கள்-அடியவர்களிடத்து, வாரக்கார-அன்புடையவரே! எதிர் ஆன-போர்க்களத்தில் எதிர்த்து வந்த, செஞ்சமரை-உதிரப் பெருக்கத்தால் சிவந்த அசுரர்களின் யுத்தத்தை, மாயும் மாயக்கார-இமைப் பொழுதில் மாயக்காரன்போல் மாய்த்தவரே! துங்கரண சூர- பரிசுத்தமான போர்வீரனாகிய சூரபன்மனை, சூறைக்கார-சண்டமாருதம்போல் அழித்தவரே! செந்தில் நகர் வாழும்-திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் வசிக்கின்ற, ஆண்மைக்கார-ஆண்மை (திடம்)யை உடையவரே! பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! முந்து தமிழ் மாலை-பழமையான தமிழ் மொழியால், கோடி கோடி-கோடிக்கணக்கான கவிகளை, சந்தமொடு-சந்தத்தோடு, நீடு பாடி பாடி-நீளமாகப் பாடிப்பாடி, முஞ்சர்-இறந்துபோகின்ற கீழ்மக்களுடைய, மனை வாசல் தேடி தேடி-வீட்டு வாசலைத் தேடித்தேடி, உழலாது-(ஏ-அசை) பொருள் விருப்பத்தால் உழன்று அலையாவண்ணமும், முந்தைவினை-(ஏ-பிரி