நிலை) பிறவிகள் தோறும் புரிந்து பக்குவத்திற்கு வராத சஞ்சித வினைகள், வராமல் போக-அடியேனைத் தொடர்ந்துவந்த துன்புறுத்தாமல் விலகிப் போகவும், மங்கையர்கள் காதல்-பெண்கள் மீதுள்ள ஆசையானது, தூரத்து ஏக-அடியேனைவிட்டு மிகுந்த தூரத்தில் ஓடிப்போகவும், முந்து அடிமையேனை-வழிவழி அடிமைப்பட்ட பழமையான தொண்டனாகிய அடியேனை, ஆள(தான் உம் அசைகள்)-ஆட்கொள்வதற்காக, முனை மீது (ஏ- அசை)-போர்க்களத்தினிடம், திந்திதிமி தோதி........செஞ்செ ணகு சேகு (என்ற) தாளத்தோடு-தாளவரிசையுடன், நடமாடும்-நடனம் செய்கின்றதும், செம் சிறிய கால்-செவ்வையான சிறிய கால்களை யுடையதும், விசால தோகை-விசாலமான தோகையை யுடையதும், துங்க அநுகூல பார்வை-விக்கினமில்லாமையை யுண்டுபண்ணுகின்ற பரிசுத்தமான அருட்பார்வையையுடையதும், தீர- தைரியமுடையதும், செம்பொன்-சிவந்த பொன்னைப் போல் ஒளி செய்வதுமாகிய, மயில்மீதில் (ஏ-அசை)-மயில் வாகனத்தின்மீது ஊர்ந்து, எப்போதும் வருவாய் (ஏ-அசை)-எந்தச் சமயத்தில் வந்தருள்வீர்? பொழிப்புரை அந்தணர்கள் வேதவிதிப்படி புரியும் வேள்விகளுக்கு இன்னல் நேராவண்ணம் காவல் புரிபவரே! செந்தமிழாலாகிய புகழ்ப்பாவினங்களை மாலையாகத் தரித்துக் கொள்பவரே! தேவர்களுக்கு அசுரரா லேற்பட்ட சிறைத் துன்பத்தை நீக்கி உதவி செய்தவரே! சேவற்கொடியை கரத்திலேந்தியவரே! சென்னி மேற் கரங்களைக் கூப்பி நின்று அன்புடன் வந்தனஞ் செய்வோர்களது சிநேகிதரே! (தாரகனுக்குத் துணைசெய்து மாயைக் கிருப்பிடமாயிருந்த) கிரௌஞ்சமலையை ஊடுருவிச் சென்று பிளந்தழிக்குமாறு செலுத்திய வேற்படையை யுடையவரே! சிறந்த எழிலுடைய இன்ப வடிவினரே! அழகு மிகுந்த தேவயானையம்மையார் விரும்புகின்ற சிவபோகத்தை யுடையவரே! அதிசயமுறத்தக்க அருள்குணங்களையுடைய குறவர் குலக்கொழுந்தாகிய வள்ளி நாயகியாருடன் பொழுது போக்குபவரே! செவ்வையான சொற்களையுடைய அடியார்களிடத்தில் அன்புடையவரே! எதிர்த்து வந்த உதிரத்தால் சிவந்த அசுரர்களை ஒருகணப் பொழுதிற்குள் |