பக்கம் எண் :


202திருப்புகழ் விரிவுரை

முந்தை வினை :-

பிறவிகள் தோறும் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் புரிந்த வினைகளானது மலைபோற் குவிந்து அனுபவித்தற்குரிய பக்குவப்படாது குவிந்துள. அவைகட்கு சஞ்சிதமெனப் பெயர். அவற்றை இறைவன் திருவருளாலேயே ஒழித்தல் வேண்டும். அந்த வினைகள் அழிந்து போகும் வண்ணம் குமாரநாயகனை விரும்பி அழைக்கின்றார். வேலாயுதத்தைடைய வீரன் அப்பெருமானே யாவர். வினைகளை அழிக்கவல்லது வேற்படை யொன்றேயாம். வினைகளழிய வேண்டுமாயின் வேற்படையைத் தாங்கிய விமலனை வழிபட வேண்டும். வினைகளை அழிக்க வல்லது வேற்படை யென்பதை அடியில் வரும் வாக்குகள் வலியுறுத்துமாறு காண்க.

  “நீசர்கள்த மோடெனது தீவினையெலா மடிய
     நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா”
                          -(ஆறுமுகம்) திருப்புகழ்.

  “வினையோட விடுங் கதிர்வேல்”        -கந்தரநுபூதி (40)

மங்கையர்கள் காதல் தூரத்தேக :-

பொன்னாசையும் மண்ணாசையும் மனிதப் பிறவிக்கேயுள. பெண்ணாசை ஒன்றே எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. எனவே, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளாலன்றி ஒழிக்க முடியாது. இதுவேயுமன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால் இம்மாதராசை மிகமிகத் தூரத்திலே யகல வேண்டும்.

கள்ளானது குடித்தாலன்றி மயக்கத்தை யுண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை யுண்டுபண்ணும். ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத்தரும் வலியுடைய பொருள் வேறொன்றும்