பக்கம் எண் :


திருச்செந்தூர்203

இல்லை. இதனை அடியில் வரும் வடமொழி தென்மொழி மறைகளாற் கண்டு தெளிக.

மாத்யதீ ப்ரமதாம் த்ருஷ்ட்வா ஸுராம் பீத்வாச மாத்யதி
தஸ்மாத் த்ருஷ்டி விஷாம் நாரீம் தூரத: பரிவர்ஜயேத்
                                         -நாரதபரிவ்ராஜகம்

உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
                                        
-திருக்குறள்.

தீயைக் காட்டிலும் காமத் தீ கொடியது: தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம்; காமத்தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை; தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும் சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்துகொண்டால் நீருள் மூழ்கி அத்தீயினாலுண்டாகும் துன்பத்தை நீக்கிக்கொள்ளலாம். காமத் தீயானது நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்
.                 -நாலடியார்.

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,                   
திருக்குறள்.

தீயானது தொட்டால்தான் சுடும்; காமத் தீயானது நினைத்தாலும் சுடும்; கேட்டாலும் சுடும்; இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும்; இதுவேயுமன்றி நஞ்சு அதனை யருந்தினால்தான் கொல்லும். இக்காமமாகிய விஷம் பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லுந் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.