திருத்தலங்கள் அறுபத்து நான்கனுள் ஒன்றாய புத்திரகாமம் என்னும் புனிதக்ஷேத்திரத்தை அடைந்து, ஆங்கோர் தூய இடத்தில் சால்யோத்தாரணம், தரைசுத்தி முதலியவைகளுஞ் செய்து யாகசாலை வகுக்கத் தொடங்கினார். மனு சூத்திரம், இரவி சூத்திரம், முனிசூத்திரம், மானவ சூத்திரம், திரபாக மண்டபம் என்னும் ஐவகைப்படும் யாகசாலைகளுக்குள் தங் கருமத்துக்குரிய யாகசாலை மானவ சூத்திரமாதலின் அதனை வகுத்து, வேதிகை, ஊர்த்வபட்டி, அதோபட்டி, துவாரம், குண்டலங்கள் இவை கற்பித்து வேதியின் நடுவிலே பிரமபதமெனவும், நாற்புறத்திலும் தெய்வ பதம், மானுடபதம், பைசாசபதம், இராக்கதபதம், என்னும் பதங்களும், அவைகளில் ஊர்த்துவமேகலை, அதோமேகலை, மத்தியமேகலை, முதலியவைகளும் கற்பித்துக்குண்டயோனி முதலியவைகளும் வகுத்தார். மேலும் யாகசாலைக் குரியனவெல்லாம் செய்து, மறை முறைப்படி சிவாகம மந்திரங்களைக் கூறிச் செய்வாராயினார். அந்த யாகம் முற்றுமேல் திதியென்பாள் வயிற்றில் கருப்ப முண்டாகும்; அங்ஙனமுண்டாயின் நமக்கும் நம் குலத்தார்க்கும் அழிவு நேரிடும் என்று தேவர் கோமானும் திருமாலும் இடையூறுகளை இயற்றத் தொடங்கினர். காசிபர் அஃதுணர்ந்து வேள்விப்பதியாகிய வேற்கரத்தண்ணலை வேண்டுவாராயினர். யாவனங்கி வடிவானோன் யாவனயத்தை யூர்ந்திடுவான்யாவனங்கி பூவெனமா மறைகளியம்பு மகபலத்தையாவன் கொடுக்கும் பொறியாகத் தோன்று மெழிலோன முக்கண்ணன்யாவனவன்றன் பதமலர்க்கிங் கடியேன் சரணம் புகநின்றேன். “யாவன் அக்கினி வடிவாயிருப்போன். எவன் மேடவாகனத்தை யூர்வோன், அம்மூர்த்தி அடியேனையும், யாகத்தையும் காத்தருள்க. “சிவாக்கினிபூ” என்று |