பக்கம் எண் :


திருச்செந்தூர்207

வேதங்கள் முழங்கும் பொருளாயிருப்பவன் எவன்? யாக பல ப்ரதானமூர்த்தி யாவன்? ஊர்த்வரேசனும் அறு திசைகளையும் காப்பவனும் யாவன்? குமாரன் திரியம்பகன் யாவன்? அக்கடவுள் அடியேனையும் யாகத்தையும் காத்தருளும்படி அடைக்கலம் புகநின்றேன். யாகத்திலே “சுப்ரமண்யோம்! சுப்ரமண்யோம்! சுப்ரமண்யோம்! என்று மும்முறை வேதங்களால் அழைக்கப்பெறும் ஆறுமுகப் பரம்பொருளுக்கு அடைக்கலம்” என்று துதித்தார்.

இவ்வொலி கேட்டதும் சேய்குரல் கேட்ட தாய்போல் தன்னருள் சுரந்து தனிவேற்பரமன் பாலவடிவத்துடன் வேலாயுதமும் பல்லவமுந்தரித்த திருக்கரத்தினராய்த் தோன்றி “அருந்தவத்தோய்! அஞ்சற்க, யாம் காத்தருள் புரிகின்றோம்; யாகத்தை முடிக்குதி” என்றருளினார். காசிப முனிவர் கந்த சகத்திரநாமத்தால் அர்ச்சித்துச் சோடசரூப தியானஞ்செய்து யாகம் புரிவாராயினார்.

தேவர்கள் புரியும் அபிசார வேள்வியினின்றுந் தோன்றி மலையன், மாரன் என்னும் அசுரர் இருவரனுப்பப்பட்டனர். அவ்வசுரர்கள் முனிவரையும் யாகப் பொருள்களையும் விழுங்கவேண்டுமென்று ஆரவாரித்து நெருங்கினார்கள், காசிபர் பயந்து. “ஞானசத்திதரா! பாலரூபா! பரஞ்சுடரே! ஓலம் ஓலம்” என்று துதித்தனர். அதுகேட்ட என்றுமகலாத இளமைக்கார எந்தையார் தம் கரத்திருந்த பல்லவத்தால் அவ்வசுரர் இருவரையும் கொன்று யாகத்தை நிறைவேற்றி, ஆங்கு முருகவேளைப் பிரதிட்டை செய்தனர், அதுவே புத்திரப் பேற்றை யளித்ததால் புத்திரகாமம் என்னும் பெயர் பெற்றது.

வரனயன் சுதன்றன் மனையருட் டிதிதன் வமிசத்தை  யழித்த
                                            மாயவனை
எரிசதக் கிருதை யழிசுதற் றருகென் றிரக்கவோர்வேள்வியை யியற்ற
வரியிருவருஞ் செயல்லலவை தீர வந்தடர் மாரனார் மலையார்
பரிவற வழித்துத் காத்தனன் வேள்விப் பதிபுதர காமநற் றலேம.