பக்கம் எண் :


திருச்செந்தூர்209

    “சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
    செஞ்சேவல்கொண்டு வரவேணும்”
                                    -(அன்பாக) திருப்புகழ்.

சிறைபட்டிருந்த இந்திர குமாரனாகிய சயந்தனுடைய கனவில் அறுமுகனார் அருள்புரிந்தபோது கோழிக்கொடியுடன் சென்றார் என்ற அச்சரிதையை விரித்தோதும் முதல்வன் புராணத்துள் கண்டு தெளிக.

    “ஆரணம் பயில் ஞான புங்கவ
     சேவலங் கொடி யான பைங்கர
     ஆவினன்குடி வாழ்வுகொண்டருள் பெருமாளே.”

                                      -(மூலமந்திர) திருப்புகழ்.

முடிமேலே அஞ்சலி செய்வோர்க்ள் நேயக்கார :-

இறைவனை வழிபாடு செய்யுங்கால் கரங்களை சிரங்களுக்கு மேல் பன்னிரண்டங்குலம் உயரக் கூப்பி வணங்க வேண்டும். அங்ஙனம் அன்புடன் அஞ்சலியஸ்தராக நின்று வழிபாடு செய்வோர்களுக்கு தேவர்களுங் காணவொண்ணாத தேவ தேவனால் திருமுருகேசன் நேயக்காரனாக எளிதில் இரங்கி இன்னருள் புரிகிறான்.

சிந்துரமின் மேவு போகக்கார :-

உயிர்களுக்கு இன்பத்தை நல்குவதற்காக இறைவன் கிரியா சக்தியாகிய தேவகுஞ்சரியுடன் போக மூர்த்தியாக விளங்குகின்றனன்.

செஞ்சொலடியார்கள் வாரக்கார :-

இனிய சொற்களையுடைய அடியார்களுக்கு அன்புடையவராக ஆண்டவன் விளங்குகின்றனர்.

    “அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல பெருமாளே.”
                                  -(குடிவாழ்க்கை) திருப்புகழ்.