துங்கரணசூர சூறைக்கார :- “துரித மிடு நிருதர்புர சூறைக்காரப் பெருமாளே.” -(ஒருபொழுது) திருப்புகழ். ஆண்மைக்கார :- “ஆரியபரம ஞானமு மழகும் ஆண்மையு முடைய பெருமாளே.” -(தோரண) திருப்புகழ். கருத்துரை யாகரக்ஷகரே! தமிழ் மாலையை யணிபவரே! தேவசகாயரே! சேவற் கொடி யுடையவரே! வணக்கம் புரிவாரது நேயரே! குன்றெறிந்த குமாரமூர்த்தியே! வள்ளி தேவசேனா சமேதரே! அடியார்க்கு அன்பரே! அசுரகுலகாலரே! செந்திலதிபரே! தமிழ்ப்பாக்களைப் பாடி அழிகின்ற மனிதர்கள் வாசல் தோறும் அலையாமலும், பண்டை வினை நீங்கவும், பெண்ணாசை யறவும், செம்பொன் மயில்மீது வந்தருள்வீர். தண்டேனுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் றடிநாயேன் மண்டோ யந்தீ மென்கால் விண்டோய் வண்கா யம்பொய்க் குடில்வேறாய் வன்கா னம்போ யண்டா முன்பே வந்தே நின்பொற் கழல்தாராய் கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர் கொன்றாய் வென்றிக் குமரேசா கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர் குன்றா மன்றற் கிரியோனே |