பக்கம் எண் :


திருச்செந்தூர்211

    கண்டா கும்பா லுண்டா யண்டார்
       கண்டா கந்தப்                    புயவேளே
      கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
       கந்தா செந்திற்                   பெருமாளே.

பதவுரை

  கொண்டாடும் பேர்-தன்னைக் கொண்டாடிப் புகழ்கின்றவர்களை, கொண்டாடும் சூர் கொன்றாய்-மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூரபன்மனைக் கொன்றவரே! வென்றி குமர ஈசா-வெற்றியையுடைய குமாரக் கடவுளாகிய தலைவரே! கொங்கு ஆர் வண்டு-பூந்தாதுகளில் நிறைந்துள்ள வண்டுகள், ஆர் பண்பாடும்-அரிய பண்களைப் பாடுகின்ற, சீர் குன்றா-சிறப்பு குறையாத, மன்றல் கிரியோனே-திருமணஞ் செய்துகொண்ட மலையாகிய வள்ளிமலையில் வாழ்பவரே! கண்டு ஆகும் பால் உண்டாய்-கற்கண்டு போன்ற (உமையம்மையின்) திருமுலைப்பால் உண்டவரே! அண்டார் கண்டா- பகைவரைக் கண்டித்தவரே! கந்த புயவேளே-நறுமணம் நிறைந்த புயாசலத்தை யுடையவரே! கந்து ஆம் மைந்து ஆர் அம்தோள் மைந்தா-கம்பத்துக்கு நிகரான வலிமை நிறைந்த அழகிய தோள்களையுடைய வீரரே! கந்தா-கந்தக் கடவுளே, செந்தில்-திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும், பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! தண்தேன் உண்டே-குளிர்ந்த தேனைப் பருகி, வண்டு ஆர்வம் சேர்-வண்டுகள் அன்புடன் மொய்க்கின்ற, தண்தார் மஞ்சு குழல்மானார் தம்பால்-குளிர்ந்த   பூமாலை சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய மாதர்களிடம், அன்பு ஆர் நெஞ்சே கொண்டே-அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு, சம்பாவம் சொற்று-நிகழ்ச்சிகளை யெல்லாம் பேசுகின்ற, அடிநாயேன்-அடிமையாகிய நாயினேன், மண்-மண்ணும், தோயம்- தண்ணீரும,் தீ-நெருப்பும், மென்கால்-மெல்லிய காற்றும், விண்-வெளியும், தோய் வண் காயம்-தோய்ந்துள்ள வளங்கொண்ட உடம்பாகிய, பொய் குடில் வேறாய்-பொய்யாகிய சரீரத்தினின்றும் உயிர் நீங்கி, வன்கானம் போய்-கொடுங் கானகம் போய், அண்டா முன்பே-நெருங்கா முன்னர், வந்தே நின் பொன் கழல் தாராய்-அடியேன் முன் வந்தருளி தேவரீடைய அழகிய திருவடி மலரைத் தந்தருளுவீர்.

பொழிப்புரை

தன்னைப் புகழ்கின்றவர்களை ஆதரித்து மகிழ்கின்ற சூரபன்மனைக் கொன்றவரே! வெற்றி நிறைந்த குமாரக்