வன்கானம் போயண்டா முன்பே :- இந்த உடம்பு இறைவனை யடைவதற்காக வந்தது. தானே வரவில்லை; முன் செய்த மாதவத்தின் பயனாய் இறைவன் தர வந்தது. இந்த உடம்பாலாய பயன் இருவினைகளின் வேரறுத்து மும்மலத் தொடர்பையும் அகற்றி அருளின் தொடர்பு கொண்டு இறைவனுடன் இரண்டறக் கலத்தலேயாம். அந்த முயற்சியில் ஈடுபடாதார் செத்து செத்துப் பிறப்பதே தொழிலாகியுழல்வர். “மண்ணுண்டு போகுது ஐயோ! கெடுவீர் இந்த மானுடமே’ என்று வருந்துகின்றார் பட்டினத்து சுவாமிகள். ஆகவே இந்த உடம்பு அழியுமுன் நற்கதிக்குரிய நலத்தைத் தேடிவிட வேண்டும். அதிலே அயராத முயற்சி யிருக்க வேண்டும். “கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே” என்ற அருணகிரிநாதரது கந்தரலங்காரத்தை நினைத்தால் எந்தக் கல் மனந்தான் கரையாது? “காதலார் மைந்தருந் தாயராருஞ் சுடும் கானமே பின்தொடர்ந் தலறாமுன் சூலம்வாள் தண்டு செஞ் சேவல் கோதண்டமும் சூடு தோளுந் தடந் திருமார்பும் தூயதாள் தண்டையுங் காண ஆர்வஞ் செயுந் தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்” -(காலனார்) திருப்புகழ். வந்தே நின்பொற் கழல்தாராய் :- “முருகா! அடியேனுடிய உடம்பை விட்டு உயிர் போகுமுன் சிறியேன்முன் தேவரீர் எழுந்தருளி வந்து எளியேனுக்கு உமது பொன்னார் திருவயடியைத் தந்து காத்தருள வேண்டும்” என்று அருணகிரிநாதர் உள்ளம் உருகி முறையிடுமாறு நம்மைத் தூண்டுகின்றார். அந்த |