பக்கம் எண் :


பழநி1

ஓம் குஹாய நம

திருப்புகழ் விரிவுரை

பழநி  (திருவாவினன்குடி)

(மூன்றாம் படைவீடு)

1

நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித சாமீ நமோநம        வெகுகோடி
  நாம சம்புகு மாரா நமோநமா
    போக அந்தரி பாலா நமோநமா
    நாகபந்தம யூரா நமோநம              பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம             கிரிராஜ
  தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம      அருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்
    ஓத லுங்குண ஆசார நீதியும்
    ஈர முங்குரு சீர்பாத சேவையு           மறவாத
  ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
    சோழ மண்டல மீதே மனோகர
    ராஜ கெம்பீர நாடாளு நாயக           வயலூரா