பக்கம் எண் :


10திருப்புகழ் விரிவுரை

விசுத்தி, அக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் பயிலப்படுவது, எனவே ஆறு ஆதாரங்களில் பயின்றவர் சுந்தரர்.

ஆதாரம் பயில என்பது ஆத்ரம் பயில் என வந்தது. சாதாரயோகம், நிராதார யோகம் என யோக வகைகள் பல உண்டு. அவ்றையெல்லாம் குரு நெறி நின்று அறிக.

சேரமான் பெருமாள் நாயனார்
உலாப்பாடிய வரலாறு

மலை நாட்டிலே மகோதை யென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே, பெருமாக்கோதையார் என்னும் சற்புத்திரர் ஒருவர் தோன்றினார். அவர் இளமையிலேயே வைராக்கியமுற்று சிவபக்தி மிகுந்து, இராஜகருமத்தை வெறுத்து, திருவஞ்சைக் களத்திலேயே திருவாலயத் தொண்டினை அன்புடன் செய்வாராயினார்.

அக்காலத்தில் செங்கோற் பொறையன் என்னும், சேர மகாராஜன் துறவறத்தை மேற்கொண்டு, தவவனம் அடைந்தான். மந்திரிமார்கள் திருவஞ்சைக் களம் போந்து, பெருமாக்கோதையாரை வணங்கி அரசராகும்படி வேண்ட, அவர் சிவாக்ஞை மேற்கொண்டு உயிர்கள் கழறினவற்றை அறியும் அறிவையும், அழிவில்லாத ஆற்றலையும், பெருங்கொடையையும், பற்பல படைகளையும், பக்தி நெறி வழுவாமல் அரசியற்றும் ஆண்மையையும், சிவபெருமான்பால் பெற்று, வணங்கி விடைபெற்று, நல்ல சுபதினத்திலே முடிசூடி, சிவாலயத்தை வணங்கி, யானை மீதூர்ந்து வெண்கொற்றக் குடை நிழற்ற, வெண்சாமரமிரட்ட, சகல விருதுகளுடன் பவனி வரும்போது, ஒரு வண்ணான் உவர் மண்ணைச் சுமந்து வர, மழையினாலே கரைந்த உவர் மண் அவ்வண்ணானுடம்பில் விபூதிபோல் தோன்ற, அதுகண்ட பெருமாக்கோதையார் என்னும் சேரமான் பெருமாணாயனார், உடனே யானையினின்றும் இறங்கி விரைந்து போய் வணங்கினார். அதுகண்டு வண்ணான் நடுநடுங்கி, அவரை வணங்கி, “அண்ணலே, அடியேன்