பக்கம் எண் :


பழநி11

அடிவண்ணான்” என்று சொல்ல, சேரமான் பெருமாணாயனாரும் “தேவரீர் திருநீற்று வடிவத்தை நினைப்பித்தீர், அடியேன் அடிச்சேரன், வருந்தாதீர் போம்” என்று சொல்லியருளினார். அவருடைய அடியார் பக்தியைக் கண்ட மந்திரிமார்கள் முதலியோர், மிகவும் இறும்பூதுற்று இறைஞ்சினார்கள். சேரமான் பெருமாள் நாயனார் நாள் தோறும் செய்யும் பூசை முடிவிலே நடராஜப் பெருமானுடைய சிலம்பொலி கேட்கும். அடியார்க்கும், மிடியார்க்கும், பொன் மாரி பொழிந்து வருவார். சிவபெருமான் கொடுத்தனுப்பிய திருமுகப்பாசுரத்தை சென்னிமேற்கொண்டு வணங்கி, அத்திருமுகங் கொண்டு வந்த பாண பத்திரருக்கு அளப்பில்லத அரதனங்களை நல்கி உபசரித்தார்.

ஒரு நாள் பூஜாந்தரத்திலே, சபாநாதருடைய சிலம்பொலி கேளா தொழிய, சேரமான்பெருமாள் நாயனார் மனமயங்கி, “அடியேன் யாதுபிழை செய்தேனோ? இனி இந்த உடம்பை ஒழிப்பேன்” என்று வாள் கொண்டு உயிர்விடத் துணிந்தனர். உடனே சபாநாயகர்  சிலம்பொலி கேட்கச் செய்து “அன்பனே! சுந்தரமூர்த்தியின் பாடலைக் கேட்டு வரத் தாழ்ந்தோம்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பெருமையை வெளிப்படுத்தினார். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பெருமையையும் அவர் அருட்பாடலின் அருமையையும், கனக சபாபதி அடியார்க்கருளும் கருணையின் திறத்தையும், நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தெரிசிக்கும் ஆவல்கொண்டு, திருவாரூர் போந்து, வன்றொண்டரை வணங்கி, வன்மீகநாதர்மீது மும்மணிக் கோவையையும், சபாநாதர்மீது பொன்வண்ணத் தந்தாதியையும், வேதாரணியர் மீது திருவந்தாதியையும் படி வழிப்பட்டார்.

பல நாட்களுக்குப் பின் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தம்முடைய கொடுங்கோளூருக்கு அழைத்துச் சென்று,