மகாசாத்தர், தமிழ் நாட்டிலேயுள்ள திருப்பிடவூரிலே அதனைக் கொணர்ந்து வெளியிட்டு, உலகில் விளங்க நாட்டியருளினார். கருத்துரை
மேன்மை பொருந்திய சோழ மண்டலத்திலுள்ள ராஜகெம்பீர நாட்டிற்கரசே! வயலூரா! சேர நாட்டிலுள்ள பழிநியில் வாழும் பரம பதியே! தேவரீருக்குப் பலமுறை நமஸ்காரம்: அருள்புரிவீர். போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம பணியாவும் பூணுகின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் ஸ்வாமீ நமோநம அரிதான வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டை கொள் தாளா நமோநம அழகான மேனி தங்கிய வேளே நமோநம வான பைங்கொடி வாழ்வே நமோநம வீறுகொண்ட விசாகா நமோநம அருள்தாராய் பாத கஞ்செறி சூராதி மாளவெ கூர்மை கொண்டயி லாலே போராடியே பார அண்டர்கள் வானொடு சேர்தர- அருள்வோனே பாதி சந்திர னேசூடும் வேணியர் சூல சங்கர னார்கீத நாயகர் பார திண்புய மேசேரு சோதியர் கயிலாயர் ஆதி சங்கர னார்பாக மாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி ஆவல் கொண்டுவி றாலே சீராடவே கோம ளம்பல சூழ்கோயில் மீறிய மீறிய ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே |