பக்கம் எண் :


16திருப்புகழ் விரிவுரை

வாழ்வான்-திருவாவினன் குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் பெருமாளே-தேவர்கள் போற்றும் பெருமை மிகுந்தவரே! அருள் தாராய்-உமது திருவருளைத் தந்து உதவுவீர்.

பொழிப்புரை

ஞான உபதேசம் புரிகின்ற தலைவரே! வணக்கம்; வணக்கம், நீதிக்கு இருப்பிடம் ஆகிய ஒளிப் பொருளே! வணக்கம்; வணக்கம். இப் பூமண்டலத்தை ஆளுகின்றவரே! வணக்கம்; வணக்கம். ஆபரணங்கள் அனைத்தையும் அணிகின்றவரே! வணக்கம்; வணக்கம். வேடர் குடியில் வளர்ந்த கொடி போன்ற வள்ளியம்மையிடம் அன்பு பூண்டவரே! வணக்கம்; வணக்கம். தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவர் துதி செய்கின்ற சுவாமியே! வணக்கம்; வணக்கம். அருமையான வேத மந்திரங்களின் வடிவாய் விளங்குபவரே! வணக்கம்; வணக்கம். மெய்ஞ்ஞானப் புலவர் தலைவரே! வணக்கம்; வணக்கம்.  வீரக் கழலையணிந்த திருவடியையுடையவரே! வணக்கம்; வணக்கம். அழகிய திருமேனியுடைய உபகாரியே! வணக்கம்; வணக்கம். தேவவுலகில் வளர்ந்த பசிய வளையல்களை யணிந்த தேவசேனைக்கு நாயகரே! வணக்கம்; வணக்கம். பெருமை நிறைந்த விசாக மூர்த்தியே! வணக்கம்; வணக்கம். தீவினை நிறைந்த சூரபன்மன் முதலிய இராக்கதர்கள் அழியுமாறு, கூரிய வேலாயுதத்தால் போர் புரிந்து பெருமையுடைய தேவர்கள் வானுலகத்தில் குடியேறுமாறு அருள் புரிந்தவரே! பாதி சந்திரனைத் தரித்த சடைமுடியினரும், திரிசூலத்தை யேந்தியவரும், சுகத்தைச் செய்பவரும், இசைக் கலைக்குத் தலைவரும், வலிமையுந் திண்மையும் பொருந்திய தோள்களையுடைய சோதியரும், திருக்கயிலாய மலையில் எழுந்தருளி யிருப்பவரும், ஆதி முதல்வரும் ஆகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் எழுந்தருளிய அழகிய உமாதேவியும், அருட்கோல அம்பிகையும், எவ்வுலகங்கட்கும் தாயாகிய மனோன்மணியும், அன்னையும், அழகியும், எல்லா உயிர்கட்கும் அன்னையான அன்புக்கு உறைவிடமானவரும், மிக்க அழகியும் பார்வதியம்மை அன்பு கொண்டு சிறப்புடன்