அவ்வாண்டவன் ஒருவனே, குருநாதன், குருபரன், குருசாமி, குருமூர்த்தி, ஆதிகுரு, சிவகுரு, ஞானகுரு என்ற திருநாமங்களையுடையவனாகத் திகழ்கிறான். ஆகவே அனபர்கள் அக்குருபரனை ஒருமை மனதுடன் உறுதியாகத் தியானித்தால், அவன் உள்நின்று பல உண்மைகளை உணர்த்துவான். நமோ நம:- நம என்ற சொல்லுக்கு வணக்கம் என்ற பொருள்; இனி மற்றொரு பொருளும் உண்டு. ம. என்னுடையது; ந-இல்லை. என்னுடையது இல்லை என்று தற்போதத்தைத் தவிர்க்க வைக்கும் மந்திரம் நம. முதலில் “எனது” என்ற புறப்பற்றை (மமகாரத்தை) விடுத்து, பின்னர் “நான்” என்ற (அகங்காரத்தை) அகப்பற்றையும் விடவேண்டும். “எல்லாம் அற என்னை யிழந்த நலம் கொல்லாய் முருகா சுரபூபதியே” -கந்தரநுபூதி (2) இறைவனை மலர்தூவி அர்ச்சிக்கும்போதும் ‘நமநம’ என்று, என்னுடையது இல்லை; என்னுடையது இல்லை என்று கூறி அர்ச்சிக்க வேண்டும். “பாதமலர் மீதில் போதமலர்தூவி பாடுமவர் தோழத் தம்பிரானே -(ஆலவிழி) திருப்புகழ் நீதி தங்கி தேவா:- பூமியை ஆளுகின்றவனுக்கு (அரசனுக்கு) நீதி மிக மிக இன்றியமையாதது. நீதியுடையவனே சிறந்த வேந்தன். தேர்க்காலில் வீழ்ந்து இறந்த ஆண் கன்றுக்காகக் கோன் கன்றாகிய தன் மகனைத் தெருவில் படுக்க வைத்துத் தேரை அவன் மீது செலுத்திய மனுநீதிச் சோழனுடைய நீதியின் சிறப்பு நினைக்குந்தொறும் நெஞ்சை உருகவைக்கின்றது. முருகவேள் அகிலலோக சக்கரவர்த்தி, அப்பரமன் எளிய அமரர்களை வலிய சூரன் வருத்தியபோது, தாம் சென்று உடனே சூரனை அழிக்காது, செந்திலில் அமர்ந்து, |