பக்கம் எண் :


22திருப்புகழ் விரிவுரை

கருத்துரை

திருவாவினன்குடி மேவுந் தேவா! உனது அருளைத் தருவாய்.

3

வாரணந்தனை நேரான மாமுலை
    மீதணிந்திடு பூணார மாரொளி
    வால சந்திர னேராக மாமுக          மெழில்கூர
  வாரணங்கிடு சேலான நீள்விழி
    ஓலை தங்கிய வார்காது வாவிட
    வான இன்சுதை மேலான வாயித       ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
    மீதில் நின்றிடை நூல்போலு வாவியெ
    தோகை யென்றிட வாகாக வூரன     நடைமானார்
   தோக கந்தனை மாமாயை யேவடி
    வாக நின்றதெ னாஆய வோர்வது
    தோணிடும்படி நாயேனுள் நீயருள்      புரிவாயே
காரணந்தனை யோராநி சாசரர்
    தாமடங்கலு மீறாக வானவர்
    காவலிந்திர னாடாள வேயயில்        விடும்வீரா
  கார்விடந்தனை யூணாக வானவர்
    வாழ்தரும்படி மேனாளி லேமிசை
    காளகண்டம் காதேவ னார்தரு       முருகோனே
ஆரணன்றனை வாதாடி யோருரை
    ஓதுகின்றென வாராதெ னாவவ
    ணாணவங்கெட வேகாவ லாமதி      விடும்வேலா
   ஆதவன் கதி ரோவாது லாவிய
    கோபுரங்கிளர் மாமாது மேவிய
    ஆவினன்குடி யோனேசு ராதிபர்     பெருமாளே.

பதவுரை

காரணம் தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும்-முருகக் கடவுள் படையுடன் போருக்கு வந்த காரணம் இன்னது என்று ஆராயாத அசுரர்கள் எல்லாரும், ஈறாக-முடிவு பெற்று அழியவும். வானவர் காவல் இந்திரன் நாடு ஆள-தேவர்களுக்குக் காவலாக நிற்கும் இந்திரன் தனது நாட்டை ஆளும் பொருட்டும், அயில் விடும் வீரா-வேலாயுதத்தை