பக்கம் எண் :


பழநி23

விடுத்தருளிய வீரரே! கார் விடம் தனை ஊண் ஆக-கரிய நஞ்சினை உணவாக, வானவர் வாழ்தரும்படி-தேவர்கள் வாழுமாறு, மேல் நாளிலே மிசை- முன்னாளில் உருண்டருளிய, காளகண்ட-கருமையான கழுத்தையுடைய, மகாதேவனார் தரும்-சிவபெருமான் தந்தருளிய, முருகோனே-முருகக் கடவுளே! ஆரணன்தனை-பிரமதேவனை, வாது ஆடி-வாது புரிந்து, ஓர் உரை ஓதுக இன்று என-ஒரு சொல்லுக்கு உரை இன்று கூறுக என்று வினாவுதலும், வாராது எனா-அதன் பொருள் எனக்கு வராது என்று கூற, அவன் ஆணவம் கெடவே- அப்பிரமனுடைய ஆணவங் கெடுமாறு, காவலாம் அதில் இடும் வேலா- சிறைச்சாலையில் அடைத்த வேலாயுதக் கடவுளே! ஆதவன் கதிர் ஓவாது உலாவிய-சூரியனுடைய ஒளி ஒயாது வீசுகின்ற, கோபுரம் கிளர்-கோபுரம் விளங்குவதும், மாமாதுமேவிய-மகாலட்சுமி உறைவதுமாகிய, ஆவினன் குடியானே-திருவாவினன்குடியில் எழுந்தருளியிருப்பவரே! சுர அதிபர் பெருமாளே-தேவர்களின் தலைவர் போற்றும் பெருமையிற் சிறந்தவரே! வாரணம் தனை நேர் ஆன-யானையை நிகர்த்த, மாமுலைமீது அணிந்திடு- பெரிய தனங்களின் மேலே அணிந்துள்ள, பூண் ஆரம் ஆர் ஒளி- அணிகலனாகிய முத்து மாலையின் அரிய ஒளியும், வால சந்திரன் நேராக மாமுக எழில் கூர-இளஞ்சந்திரனுக்குச் சமானமான சிறந்த முகம் அழகு மிகுந்து விளங்கவும், வார்-நீண்டும், அணங்கு இடு- (காண்போர்க்குத்) துன்பம் புரிவதும், சேல் ஆன நீள்விழி-சேல்மீன் போன்றதும் ஆகிய நீண்ட கண்கள், ஓலை தங்கிய வார்காது வாவிட-பொன்னோலை பூண்டுள்ள நீண்ட காதுகளைத் தாவி நிற்கவும், வான இன்சுவை மேலான வாய் இதழ்  அமுது ஊர-தேவரது இனிய அமுதத்தினும் மேலான வாயிதழில் அமுதம் ஊறவும், தோரணம் செறி தார் வாழை ஏய்-தோரணத்துக்கு பயன்படும் குலை தள்ளிய வாழையை யொத்த, தொடை மீதில் நின்ற இடை நூல் போலும்-தொடை மேலே விளங்கும் இடையானது நூல் போல் விளங்கவும், உலாவிய-மெல்ல அசைந்து உலாவி, தோகை என்றிட-மயில் என்று சொல்லுமாறு, வாகு ஆக ஊர் ஆன நடைமானார்-அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடைய மாதர்களின், தோதகந்தனை-வஞ்சகச் செயலை, மாமாயையே வடிவு ஆக நின்றது எனா-மகா மாயை வடிவு கொண்டு நிற்கின்றது என, ஆய ஓர்வது தோணிடும்படி-ஆய்ந்து அறியும் அறிவு எனக்கு விளங்கும்படி, நாயேனுள்- அடியேனுடைய உள்ளத்தில், நீ அருள் புரிவாயே-தேவரீர் அருள்புரிவீர்.

பொழிப்புரை

முருகவேள் தம்மீது படைஎடுத்துப் போர் புரிய வந்த காரணம் யாது என்பதை ஆராயாது அசுரர்கள் முழுவதும் முடியுமாறும் தேவர்கட்குக் காவலாக நிற்கும் இந்திரன் பொன்னுலகத்தை ஆளுமாறும் வேலை விடுத்த வீரமூர்த்தியே! கரிய நஞ்சை உணவாக வானவர்