பக்கம் எண் :


பழநி3

நமோநம-நமஸ்கராம் நமஸ்காரம், போக அந்தரி பாலா-நலன்களை அனுபவிக்கச் செய்யும் போக சத்தியாகிய உமா தேவியாரது புதல்வரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், நாக பந்த மயூரா-கால்களில் பாம்புகள் சுற்றப்பட்டுள்ள மயில்வாகனத்தை யுடையவரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், பர சூரர் சேததண்ட விநோதா-பகை கொண்டு வந்த சூராதியவுணர்களைத் தண்டித்து சேதித்ருளிய திருவிளையாடல்களைப் புரிந்தவரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், கீத கிண் கிணி பாதா-இனிய நாதத்தோடு கூடிய சதங்கைகளை யணிந்துள்ள திருவடியுடையவரே! நமோநம- நமஸ்காரம் நமஸ்காரம், தீர-தைரியத்தை உடையவரே! சம்ப்ரம- சம்பிரமுடையவரே! வீரா-சிறந்த வீரரே! நமோநம-நமஸ்காரம், நமஸ்காரம், கிரி ராஜ-மலைகளுக்கு நாயகரே! தீப மங்கள ஜோதீ-ஞானச் சுடர்விளக்காகிய அருட்பெருஞ் ஜோதியே! நமோநம-நமஸ்காரம், நமஸ்காரம், தூய அம்பல லீலா-பரிசுத்தமாகிய தகராகாயத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிந்தருள்பவரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், தேவ குஞ்சரி பாகா-தெய்வயானை யம்மையாரை ஒரு பாகத்தில் உடையவரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், அருள் தாராய்-அடியேனுக்குத் தேவரீருடைய திருவருளைத் தந்து அருளவேண்டும்.

பொழிப்புரை

இல்லையென்றிரக்கும் இரவலருக்கு இல்லையென்னாத ஈகையும், பற்பலவிதமான சம்பிரமத்தோடு கூடிய பூசையும், வேதாகமாதி அறிவு நூல்களையும், தேவாரம் திருவாசகம் முதலிய முத்தி நூல்களையும் ஓதியுணர்தலும் நற்குணங்களும், நல்லொழுக்கமும், நல்ல நீதிநெறிகளும் உயிர்களிடத்தல் இரக்கமும், குருநாதனுடைய திருவடித் தாமரையை மறவாத தன்மையுமாகிய சிறந்த நற்குணங்களை யுடையவர் வாழ்கின்றதும், சத்த தீவினர்களால் புகழப்படுகின்றதும் காவிரிநதியால் வளமுற்று விளங்குவதுமாகிய சோழ மண்டலத்தில், மனதைக் கவரும் வனப்புடைய ராஜகெம்பீர வளநாட்டினை அரசாளும் நாயகரே! அந்நாட்டில் மிகவும் சிறப்புடன் விளங்கும் வயலூரில் வாழ்பவரே! தம்மிடத்து மிகவும் அன்பு பொருந்திய சுந்தரமூர்த்தி சுவாமிகளது நட்பைப் பெற்று, அப்பெருந்தகையார் திருக்கயிலாயத்திற்குப் புறப்பட்டபோது அவருடனேயே, முன்னாளில் ஆடுவதும் போருக்குரிய உக்கிரமுடையதுமாகிய குதிரையின் மீது ஏறி, பெருமை பொருந்திய திருக்கைலாய மலைக்குச் சென்று, திருக்கைலாய ஆதி உலா என்னும்