பிரபந்தத்தை அங்கு ஆசுகவியாகப் பாடியருளிய சேரமான் பெருமான் நாயனார் அரசு செய்யும் பேற்றைப் பெற்ற கொங்குதேயத்தில், நல்ல காவூர் நாட்டிலுள்ள திருவாவினன்குடி என்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளவரே! தேவர்கள் பெருமாளே! நாதம் விந்து கலை என்பவைகட்கு முதல்வரே! நமஸ்காரம் நமஸ்காரம், வேதமந்திர சொரூபரே! நமஸ்காரம் நமஸ்காரம். ஞான பண்டிதரே! நமஸ்காரம் நமஸ்காரம், அநேக கோடி திருநாமங்களை யுடையவரும், சுககாரணருமாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! நமஸ்காரம் நமஸ்காரம். வினைப் பயன்களைத் துய்க்கச் செய்யும் போகசக்தியாகிய சிவகாமி அம்மையாரது திருப்புதல்வரே! நமஸ்காரம் நமஸ்காரம். கால்களில் அரவங்கள் சுற்றப்பட்டுள்ள மயிலை வாகனமாக உடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம். பகைத்து வந்த சூரபன்மன் முதலிய அசுரசேனைகளை அழித்துத் தண்டித்தருளிய திருவிளையாடலைப் புரிந்தவரே! நமஸ்காரம் நமஸ்காரம். இனியவொலியையுடைய தண்டை சதங்கைகளை யணிந்துள்ள திருவடிக் கமலங்களை யுடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம். தீரமும் சம்பிரமும் வீரமு முடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம். மலைகளுக்கு நாயகரே! ஞான தீபகமாகத் திகழ்பவரே! நமஸ்காரம் நமஸ்காரம். அருள் வெளியில் ஆனந்தக் கூத்தாடுபவரே! நமஸ்காரம் நமஸ்காரம். தெய்வயானை யம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே! நமஸ்காரம் நமஸ்காரம். அடியேனுக்குத் தேவரீருடைய திருவருளைத் தந்தருள்வீர். விரிவுரை நாத விந்து கலா தீ:- இறைவனது சக்தி அளவிடப்படாத நுண்மையும் ஆற்றலும் வாய்ந்ததாதலின், அஃது இவ்வுலகங்களுக்கு முதலான அசுத்த மாையை நேரே சென்று பொருந்தி இயக்குமாயின், அவ்வசுத்த மாயை, அச்சக்தியின் வேகத்தைத் தாங்க மாட்டாமையின் இவ்வுலகங்கள் |