தோன்றாவாம்; அது பற்றி அச்சக்தி நுண் பொருளியல்பில் ஒருவாற்றால் தன்னோடு ஒத்தும், பருப்பொருளியல்பில் ஒருவாற்றால் அசுத்த மாயையோடு ஒத்தும், நடுநிலையாய் நிற்கும் சுத்த மாயை எனப்படும் விந்து சக்தியோடு நேரே பொருந்தி நின்று, தனது வேகத்தை அதன் வாயிலாக அசுத்த மாயை தாங்குமளவாக வைத்துத் தணிவுப்படுத்தி, பின்னர் அவ்வசுத்த மாயையை இயக்கி, இவ்வுலகங்களையும் இவ்வுலகத்துப் பல் பொருள்கைளையும் தோற்றுவிக்கும். எனவே சிவசக்தி நேரே சென்று இயைந்து நிற்குமிடம் விந்து என்பது அறியப்படுகிறது. இனிச் சிவசக்தியால் உந்தப்பட்ட விந்து மாயை, சொல்லொணா இயக்கம் உடையதாய்ச் சுழல, அதன்கணின்றும் ஒரு நாதம் உண்டாகும்; அந்நாதம் அசுத்த மாயையின் அணுக்களைத் திரட்டி, உலகங்களைப் படைக்கும் சிவசக்தியால் இயக்கப்பட்ட விந்து சுழிந்து இயங்குங்கால் வட்ட வடிவும் அவ்வட்ட வடிவினின்று தோன்றும் நாதம் வரிவடிவம் உடையதாம். இவ்விந்து நாதங்களின் சேர்க்கையையைத்தான், `உழு பிள்யைார் சுழியென முதல் உலக தோற்றத்திற்கு காரணமென்பதைப் புலப்படுத்த, முதலில் தீட்டப்படுகின்றது. இதன் அறிகுறியே சிவலிங்கமுமாம். இனிக் கலையென்பது ஐந்து வகையாகும்; அவை நிவர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை யென்பன; இவற்றுள்:-(1) நிவர்த்தி கலையென்பது: தன்கட்சேர்ந்த பக்குவர்கட்குச் சங்கற்பங்களை விடுவித்து மீட்கும்; அதனால் நிவர்த்தியெனப் பெற்றது; இதற்கு தேவதை பிரமதேவர். (2) பிரதிட்டாக்கலையென்பது: தன்னை யடைந்த ஆன்மாக்கட்கு முற்சொன்ன, சங்கற்ப விகற்பங்களை விசேடித்து நிறுத்தும்; இதற்கு தேவதை திருமால். (3) வித்தியாகலையென்பது: வித்யா என்பதற்கு அறிவு என்று பொருள்; தன்னை யடைந்திருக்கும் ஆன்மாக்களின் அறிவை பிரகாசிக்கச் செய்யும்; இதற்குத் தேவதை உருத்திரமூர்த்தி. (4) சாந்திகலையென்பது: சாந்தி |