இறைவனையடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்த வர்கள். உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள். கிழவோனே:- கிழவன்-உரியவன். வள்ளிக்கு உரியவன். வள்ளிப்பிராட்டியை எம்பெருமான் கிழவடிவு காட்டிச் சென்று மழவடிவுடன் மணந்தான். “மறவர் பொருப்பில் ஒருத்தி பொருட்டனாள் இள வடிவ முழுக்க நரைத்த விருத்த வேதியன்” -திருவகுப்பு (6) அருளாளா:- இறைவனுடைய அருள் அகில உலகங்களை ஆளுகின்றது. இறைவன் அவ்வருளை ஆளுகின்றனன்: அதனால் அப்பரமனை அருளாளன் என்று ஆன்றோர் புகழ்வர். “பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா” -தேவாரம் கருத்துரை வள்ளிமணவாளா! சூரனை வென்ற வீரா! அருளாளா! ஆவினன்குடியப்பா! மாதராசை நீங்கி நின்னை அடியேன் புகழ்வேன். கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்று பொறுத் தடியேனும் தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச் சாப மொன்றுநுதற் கொடியார்தம் தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் தகுமோதான் |