சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத் தோய முஞ்சுவறப் பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியிற் றிரிவோனே ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற் றால முண்டவருக் குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் றாவி னன்குடியிற் பெருமாளே. பதவுரை சூரன் அங்கம் விழ-சூரபன்மனுடைய உடல் நின்று அழிந்து விழவும், தேவர் நின்று தொழ-தேவர்கள் திருமுன் நின்று வணங்கவும், தோயமும் சுவற- கடல்நீர் வற்றிப்போகவும், பொரும் வேலா-போர் செய்த வேலாயுதக் கடவுளே! தூய்மை கொண்ட பரிசுத்தமுடைய, குற தோகை நின்ற-குரவர் குலத்தில் வளர்ந்து மயில் போன்ற வள்ளியம்மை வாழ்ந்த, புன் சூழ் பெறும் கிரியில் திரிவோனே-தினைப்புனங்கள் சூழ்ந்த பெரிய மலையில் உலாவினவரே! ஆரணன்-பிரம்மதேவரும், கருடகேதனன்-கருடக் கொடியுடைய திருமாலும், தொழ-வணங்க, ஆலம் முற்று உண்டவருக்கு-நஞ்சம் முழுவதையும் உண்ட சிவபெரு மானுக்கு, உரியோனே-உரிய புதல்வனே! ஆலையும்- கரும்பாலைகளும், பழன-வயல்களும், சோலையும் புடைகற்று- மலர்ச்சோலைகளும் அருகில் சூழ்ந்துள்ள, ஆவினன்குடியில்- திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையின் மிகுந்தவரே! கார் அணிந்த வரை பார் அடர்ந்து-மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப்பூமியில் பொருந்தி, வினை காதல் நெஞ்சு அயர- வினைகளை விளைக்கும் காலினால் உள்ளம் சோர்ந்து, தடுமாறி- தடுமாற்றத்தையடைந்து, கால்-வாயு, நரம்பு-நரம்பு, உதிர-இரத்தம், தோல்- தோல், வழும்பு உறு-கொழுப்பு இவைகளுடன் கூடிய, பொய் காயம் ஒன்று பொறுத்து-பொய்யான இந்த உடல் ஒன்றைச் சுமந்து, அடியேனும்- அடியவனாகிய நான், தார் இணங்கு சூழல்-மாலை சேர்ந்த கூந்தலையும், கூர் அணிந்த விழி-கூர்மையான கண்களையும், சாபம் ஒன்று நுதல்-வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய, கொடியார்தம்-கொடி போன்ற மாதருடைய, தாள் பணிந்து-பாதத்தைப் பணிந்து, அவர் பொன்தோள் விரும்பி- அவர்களுடைய அழகிய தோள்களை விரும்பி, உலையத் தகுமோ தான்- மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போவது தக்கதாமோ? பொழிப்புரை சூரபன்மனுடைய உடல் அழிந்து விழுமாறும் தேவர்கள் திருமுன் நின்று வணங்கவும்,கடல் நீர் வற்றிப் |