போகவும், போர் செய்த வேலாயுதக் கடவுளே!, பரிசுத்தமுடைய குறவர் குலமகளாகிய மயில் போன்ற வள்ளியம்மையார் இருந்த தினைப்புனங்கள் சூழ்ந்த பெரிய மலையில் திரிந்தவரே! பிரமதேவரும், கருடக் கொடியுடைய நாராயணரும் வணங்க, ஆலகால விடம் முழுவதும் உண்ட சிவமூர்த்திக்கு உரிய புதல்வரே! கரும்பாலையும் வயல்களும் மலர்ச் சோலையும் அருகில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! மேகந் தவழ்கின்ற மலைகளுடன் கூடிய இப்பூதலத்தில் பொருந்தி, வினைகளை விளைக்கும் காதலால் மனம் வருந்தித் தடுமாற்றமுற்று, வாயு-நரம்பு-இரத்தம்- தோல் கொழுப்பு இவைகளுடன் கூடிய பொய்யான இந்த உடம்பைச் சுமந்து, அடியேன், மாலை தரித்த கூந்தலும் கூரிய கண்களும், வில் போன்ற நெற்றியும் உடைய மகளிருடைய பாதங்களில் பணிந்து, அவருடைய அழகிய தோளை விரும்பி, மிகவும் தாழ்வுற்று அழிவது தகுமோ? விரிவுரை காரணிந்த வரைப்பார்:- மேகந் தவழுகின்ற மலைகளுடன் கூடி இந்தப் பூதலம் விளங்குகின்றது. நல்வினைகளை சுவர்க்கத்திலும், தீவினைகளை நரகத்திலும் அனுபவித்த ஆன்மா, மிச்சிர கன்மங்களை நுகரும் பொருட்டு இன்ப துன்பங்கள் விரவிய இப்பூதலத்தில் வந்து பிறக்கின்றது. இப்பூமியில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வருகின்றன. வினைக்காதல் நெஞ்சய:- பலப்பல வினைகளை யுண்டாக்குந் தன்மையது காதல் நோய். காதலுற்றார் மதிமயங்கிப் பல வினைபுரிவர். அதனால் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளாகி அல்லலுறுவர். காதல் என்பது இங்கே ஆசையைத் தெரிவிக்கின்றது. |