பக்கம் எண் :


பழநி55

கானரம்புதிர தோல்வழும்புறு பொய்க்காயமொன்று பொறுத்து:-

இந்த உடம்பு வாயு. நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளால் ஆகியது. பொய் என்ற சொல்லுக்கு இருபொருள் உண்டு. 1. இல்லாத ஒன்று பொய்யெனப்படும்; 2. தோன்றி மறையும் நிலையில்லாததும் பொய்யெனப்படும். பொய்யுலகம், பொய்வாழ்வு, பொய்யுடம்பு என வரும் இடங்களில் பொய் என்ற சொல்லுக்கு இல்லாதது என்று பொருளன்று; நிலைப்பேறில்லாதது என்று பொருள். மாதவச் சிவஞான சுவாமிகள் மாபாடியத்தில் இங்ஙனம் பொருள் கண்டார்.

பொய்யுடலை மெய்யென்று நம்பி நால்வர் சுமக்கும் (சிறிது நேரம் மட்டும் பொருள் பெற்றுச் சுமக்கும்) இந்தக் கனமான உடம்பை, நான் ஒருவனே நெடுங்காலமாகச் சுமந்து அயர்ந்துவிட்டேன்.

“தூலபங்க காயம் வம்பி லேசுமந்து நான் மெலிந்து
 சோருமிந்த நோயகன்று துயராற”
   -(தோலெலும்பு) திருப்புகழ்

உலையத் தகுமோதான்:-

மாதர் வயமாகி அவரைக் கும்பிட்டு வம்பிட்டு மிகவும் இழிந்த நிலையை யடைந்து, உலைவது தகாது. பல கோடிப் பிறவியில் செய்த மாபெரும் புண்ணிய மிகுதியால் கிடைத்த இம்மானுட உடம்பை, வரகுக்குப் பொற்கொழுவைக் கொண்டு உழுதது போல், வறிதாக்கி வாடி வருந்துவது அறிவுடைமையாகாது.

சூரனங்கம் விழ:-

சூரபன்மன் ஆணவமலம். அதன் வலி குன்றி அடங்கியது. இதை யுணர்த்துவது கந்தபுராணம்.

தோயமும் சுவற:-

கடல் வற்றியது என்றது - பிறவிப் பெருங்கடல் வற்றி விட்டது என்பதைக் குறிக்கிறது.

கிரியில் திரிவோனே:-

வள்ளி பொருட்டு வடிவேற் கடவுள் வள்ளிமலையில் திரிந்தார் என்பது, பக்குவப்பட்ட