ஆன்மாவின் பொருட்டு இறைவன் இரங்கி வந்த அருள் நிலையை அறிவிக்கின்றது. ஆலையும்:- ஆலை-வேதவேள்விச் சாலை என்றும் பொருள். கருத்துரை சூரசங்கார! வள்ளிநாயக! சிவபால! ஆவினன்குடியப்பா! பெண் மயலில் தாழாது அடியேனுக்கு அருள் செய்வாய். சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதா அலைந்துழலு மடியேனை அஞ்சலென வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள் ஞான இன்பமது புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள் சவுந்தரிக செகமெல்மெய் கண்டவிறல் பெருமாளே. பதவுரை சிவனார் மனங்குளிர-சிவபெருமானுடைய திருவுள்ளமானது (பிரணவ மந்திரரோபதேச அமுதத்தால்) குளிர்ந்து இன்புற்று விளங்க, உபதேச மந்த்ரம்- (வெளிப்படையாகக் கூறத்தகாததும்) சீடனுக்குக் குருநாதன் உபதேச முறையால் கூறத்தக்கதுமாகிய பிரணவ மந்திரப் பொருளை, இருசெவி மீதிலும் பகர் செய்- (வாய்விட்டுச் சொல்ல வொண்ணாததால் சின்முத்திரையால் காட்டியதோடு) இரண்டு |