நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார். அரவு புனிதரும் வழிபட மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ் அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. -(குமரகுருபரகுணதர) திருப்புகழ் அவ்வாறு கூறிய அமுதமொழி இரண்டு செவிகளிலும் நிரம்பியது என்பது பொருள். சிவகாமி சுந்தரிதன் வரபால:- சிவகாமசௌந்தரிக்கு மிகவும் அன்புடைய குழந்தை முருகப்பெருமான். “கச்சித்தாய் உச்சியை மோந்து கண்ணோடணைக்குந்திருத்தாளா,” என்ற சிதம்பர சுவாமிகளின் திருவாக்காலும் “பார்வதீப்ரியநந்தனாய நம”. என்ற திருமந்திரத்தாலும் விளங்குகின்றதல்லவா? நின்செயலே விரும்பியுள நினையாமல்:- திருவாலயத்திற்குச் செல்லுங் காலங்களிலும் ஓய்வு பெற்றுத் தனித்திருக்கும் சமயங்களிலும், மனத்தில் உலக விவகாரங்களைக் கொண்டுவிட்டு, பற்பல எண்ணங்களை எண்ணி நெஞ்சம் புண்ணாகாமல், எம்பெருமானுடைய திருவருட் பெருக்கால் செய்தருளிய திருவிளையாடல்களின் பெருமைகளையும், அதன் தத்துவங்களையும், அவருடைய திருவடியையடையும் செந்நெறியையும், அடியார்க்கு ஆண்டவர் எளிதில் வந்து இன்னருள் செய்யும் பெருங்கருணைத் திறத்தையும் எண்ணி எண்ணி இன்புற வேண்டும். இங்ஙனம் என்னுந் தன்மை யுடையாருடைய மனத்தில் தீய எண்ணங்கள் அணுத்துணையும் இருப்பதற்கு இடமில்லை. “சிந்தனை நின் தனக்காக்கி” -திருவாசகம் “நினைக்க மடநெஞ்சும்” -தேவாரம் அவமாயை கொண்டு உழலும்:- “மகாமாயை களைந்திட வல்லபிரா”னுடைய அருட்செயல்களை விரும்பி நினையாமையால் உலக |