பக்கம் எண் :


6திருப்புகழ் விரிவுரை

யென்பதற்கு காந்தத் தன்மையென்று பொருள்; இது தன்னைச் சார்ந்த உயிர்கட்கு விருப்பு வெறுப்பை ஒழித்து சங்கற்பவழிச் செல்லவொட்டது முதன்மையான சாந்தத்தை விளைவிக்கும்; இதற்கு தேவதை மகேச்சுரர். (5) சாந்தியதீத கலையென்பது, சாந்திக்கு மேலாய பரம ஞானத்தை யுண்டாக்கும்; இதற்குத் தேவதை சதாசிவ மூர்த்தி. இவ்வைந்து கலைகளின் நிறம், குணம், அவத்தை, நாடி, வாயு என்பவற்றின் விரிவை மதங்க ஆகம காலோத்தராதிகளிற் கண்டு தெளிக.

எனவே மேற்போந்த விந்து நாத கலைகளுக்குத் தலைவராக தாண்டி நிற்பவர் முருகவேள்.

“விந்து நாத ஓசைக்குத் தூரமானது”        -(வாசித்து) திருப்புகழ்.

வேத மந்திர சொரூபா:-

“அப்ரமேய மரூப மவ்யக்தம்” என்று வடமொழி வேதமும், “உருவன்று அருவன்று” என்று தமிழ் வேதமுங் கூறியிருக்க, சுப்ரமண்ய பரப்ரமத்திற்கு மந்திர வடிவம் மாய வடிவம் இல்லையென்பது மலையிலக்காக இருப்பவும், ஈண்டு “மந்த்ர சொரூபா” என்று கூறி மந்திர வடிவுடையவன் என்று விளக்கும் காரணம் பின் வருமாறு:

குமாரக் கடவுளுக்கு உண்மையில் வடிவமில்லை யாயினும் ஆன்மாக்களின் தியானபூசா நிமித்தம் மந்திராதி வடிவங்களைத் தாங்குகின்றார். “அருவுமாகுவன் உருவமாகுவன்” அருவும் உருவமற்றதோர் தன்மையுமாகுவன்” என்று கந்தபுராணமும், “காணொணாதது உருவோடருவது” என்ற திருப்புகழும், “உருவாயருவாய்” என்று அநுபூதியும் தெரிவிக்கின்றன.

மந்திரமென்பதற்கு, மந்-நினைத்தல், த்ர-காப்பாற்றல் எனவே நினைப்பவரைக் காப்பது என்பது பொருள். இதுவேயுமன்றி, “மகா ரச்சைவ மாயாஸ்யாத் த்ருசப்தஸ் தாரகோ பவேத்” என்று அசிதாமங் கூறியவாறு மா- மாயையை, த்ர-விடுவித்தல், எனவே மாயையைத் தூண்டுவிப்பது மந்திரமாகும் எனவும் பொருள்படும்.