பக்கம் எண் :


பழநி61

நவகண்டங்கள்:-

பரதகண்டம், குருகண்டம், கிம்புருடகண்டம், இளாவிருதகண்டம், அரிவருடகண்டம், கேதுமால கண்டம், இரமிய கண்டம், பத்திராசுவ கண்டம், இரணிய கண்டம் என்பனவாம்.

நிசதேவ:-

முருகப்பெருமான் என்றும் ஒரு படித்தாக நித்தியமாக விளங்குபவர். செத்துப் பிறக்கின்ற பிறதெய்வங்களைப் போலல்லாது, பிறவாமலும், இறவாமலும், இருக்கும் தனிப்பெருந்தலைவர்.

“என்று மகலாத இளமைக்கார”
                        -(சந்தனசவாது) திருப்புகழ்

“பெம்மான் முருகன் பிறவா னிறவான்” -அநுபூதி (12)

“என்றும் இளையா யழகியாய்”          -நக்கீரர்

“செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள மணவாள மணவாள
          செங்கீரை யாடி யருளே”
    -குமரகுருபரர்

நலமான விஞ்சை கரு விளைகோவே:-

சகல கலைகளும் முருகப்பெருமானிடத்திலிருந்தே தோன்றின. வேதாகமங் களும் அப்பெருமானுடைய திருமுகங்களினின்றும் தோன்றினவே; அதனால் அருணகிரியார் அப்பெருமானைப் பின்வருமாறு துதிக்கின்றார்.

    “வேதாகம ஞானவினோத”        -அநுபூதி (26)

    “கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
          கல்வி கரைகண்ட புலவோனே”

                      -(அல்லசடைந்த) திருப்புகழ்

    “சகல கலை முழுதும் வல பெருமாளே”
                         -(அளகநிறை) திருப்புகழ்

சவுந்தரிக:-

ஆயிரங்கோடி மன்மதர்கள் ஒருங்கு கூடினும் எந்தை கந்தவேள் திருவடியழக்கு இணையாகாது.