பக்கம் எண் :


பழநி63

கருத்துரை

பரசிவகுருவே! மலைமகள் மைந்த! கந்த! மால்மருக! மெய்த் தெய்வமே! கலாபதி! கஜவல்லி வனவல்லி மணாள! கதிர்வேல! திருவாவினன்குடியில் வாழ்பவ! தேவரீரது அருட்டிறத்தையுன்னாது அவமாயை கொண்டுழலும் அடியேனை, அஞ்சேலென்று அருளி, அருள் ஞான இன்பத்தைக் கொடுத்து ஆண்டு கொள்வீர்.

11

பகர்தற்கரி தானசெந்தமி ழிசையிற்சில பாடலன்பொடு
          பயிலப்பல காவியங்களை             யுணராதே
    பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு வாய்மடந்தையர்
          பசலைத்தன மேபெறும்படி            விரகாலே
சகரக்கடல் சூழுமம்புவி மிசையிப்படி யேதிரிந்துழல்
          சருகொத்துள மேயயர்ந்துடல்        மெலியாமுன்
    தகதித்திமி தாகிணங்கின எனவுற்றெழுந்தோகையம்பரி
          தனிலற்புத மாகவந்தருள்             புரிவாயே
நுகர்வித்த கமாகுமென்றுமை மொழியிற்பொழி    பாலையுண்டிடு
          நுவல் மெய்ப்புள பாலனென்றிடு    மிளையோனே
    நுதிவைத்தக ராமலைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட
          நொடியிற்பரி வாகவந்தவன்          மருகோனே
அகரப் பொரு ளாதியொன்றீடு முதலக்கர மானதின் பொருள்
          அரனுக்கினி தாமொழிந்திடு           குருநாதா
    அமரர்க்கிறை யேவணங்கிய பழநித்திரு வாவினன்குடி
          அதனிற்குடி யாயிருந்தருள்          பெருமாளே.

பதவுரை

வித்தகம் ஆகும்-ஞானமயமாக விளங்கும் இதனை, நுகர் என்று “பருகுவாய்” என்று, உமை மொழியில் பொழி பாலை-உமாதேவி (சொல்லியருளிப் பொழிந்த) ஞானப்பாலமுதத்தை, உண்டிடும்-அருந்திய, நுவல் மெய்ப்பு உட் பாலன் என்றிடு-(வேதாகமங்களாலும்