பக்கம் எண் :


பழநி65

பட்டு (ஆதிமூலமென்று) வணங்கிப் புகழ்ந்த “கஜேந்திரம்” என்ற யானைக்குத் திருவருள் புரியும் பொருட்டு கணப்பொழுதிற்குள் அன்புடன் வந்த திருமாலினது திருமருகரே! அகார உகார மகாரங்களடங்கியதும் வேதாகமாதி கலைகட்கு முதலக்கரமானதுமாகிய குடிலை மந்திரத்தின் மெய்ப்பொருளை சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்தருளிய குருநாதரே! தேவர் கோமானாகிய இந்திரன் வணங்கி வழிபட்ட பழநிமலையின் அடியில் விளங்கும் திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் என்றும் நிலைபெற்று எழுந்தருளி யிருந்து அடியார்கட்குத் திருவருள் செய்கின்ற பெருமையின் மிக்கவரே! (மொழியின் இனிமையையும் அமைப்பின் அருமையையும்) இத்தன்மைத்து என்று சொல்லுதற்கு அரிதாகிய செந்தமிழ் மொழியாலாகிய சில பாடல்களை தேவரீரிடமுள்ள மெய்யன்புடன் கற்றுக் கொள்ளும் பொருட்டு, பற்பல தமிழ்ப் பெருங்காப்பியங்களை ஓதி யுணர்ந்து கொள்ளாமல், பவளத்தையும் விழுதியின் கனியையும் ஒத்து சிவந்திருக்கின்ற வாயையுடைய பெண்களினுடைய காம விகாரத்தால் உண்டாகும் நிறவேற்றுமையடைந்து, விரகதாபத்தால், சகரர்களா லுண்டாகிய கடல் சூழ்ந்த அழகிய உலகில் இவ்வாறு அவமே திரிந்து சருகுக்கு நிகராகச் சாரமற்று உழன்று, உளந்தளர்ந்து உடல் மெலிந்து அடியேன் வீணேயழியாமுன், தகதித்திமி தாகிணங்கிண என்ற தாள ஒத்துடன் நடித்து எழுகின்ற அழகிய மயில்வாகனத்தின்மீது அற்புதமாக வந்து அருள்புரிவீர்.

விரிவுரை

பகர்தற்கு அரிதான செந்தமிழ்:-

தமிழ் மிகச் சிறந்த கடவுள் மொழியாம். தோன்றித் தோன்றி மறையும் ஏனைய மொழிகள் போன்றதன்று. என்றைக்கும் இளமையாகவே விளங்கி உன்னுந்தோறும் உன்னுந்தோறும் உவட்டா இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்யும் உயர்வுடையது. முழுமுதற் கடவுளாம்,